Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd February 2022 08:36:31 Hours

இராணுவ சேவை வனிதையர் பிரிவுத் தலைவி நலன்புரி திட்டங்களை பார்வையிட மானிங் டவுன் குடியிருப்பு வளாகத்திற்கு விஜயம்

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன் அவர்கள் திங்கட்கிழமை (31) நாரஹேன்பிட்டியில் உள்ள மானிங் டவுன் குடியிருப்பு வளாகத்திற்கு கள விஜயமொன்றை மேற்கொண்டு தற்போது நடைபெற்று வரும் சேவை வனிதையர் சிற்றூண்டிசாலை விஸ்தரிப்பு தொடர்பான நிர்மாணப் பணிகள், புனரமைப்பு மற்றும் ஏனைய இடங்கள் என்பனவற்றை பார்வையிட்டார்.

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் பிரிகேடியர் ஒருங்கிணைப்பு பிரிகேடியர் துஷார பாலசூரிய, திட்டமிட்ட புனரமைப்பு பணிகள் தொடர்பாக அதன் தற்போதைய நிலை மற்றும் தற்போதைய தேவைகள் பற்றி விளக்கமளித்தார். திருமதி நெல்சன் பின்னர் குறித்த கட்டுமான தளத்தை அவதானித்து, திட்டத்தில் ஈடுபட்டுள்ள பொறியாளர் சேவை படையணியின் அதிகாரிகள் மற்றும் படையிருடன் சில எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்.

மேலும் சிற்றூண்டிச்சாலைக்கு முன்னால் உள்ள தோட்டத்தை கவர்ச்சிகரமான முறையில் அழகுபடுத்துவதற்கு முன்னுரிமை அளிக்குமாறு அவர் அந்த படையினரிடம் கூறினார். நாரஹேன்பிட்டிய மானிங் டவுன் பிரசேத்தில் அமைந்துள்ள நலன்புரி பேக்கரி, சிற்றுண்டிச்சாலை மற்றும் அத்தியவசிய பொருட்கள் அடங்கிய விற்பனை நிலையம் ஆகியவை இந்த வளாகத்தில் வசிக்கும் படையினருக்கு நலன்புரி சேவைக்காக மானிய விலையில் வழங்குகின்றன. அவர் வருகையின் போது, பெண்களுக்கான அழகு பராமரிப்பு பகுதியுடன் புதிதாக நிர்மானிக்கப்படும் சிகை அலங்கார பகுதி, மற்றும் தையல் நிலையத்தினையும் பார்வையிட்டார். மேலும் வளாகத்தில் புதிய சுப்பர் மார்க்கெட் நிர்மானிப்பது தொடர்பான நடவடிக்கைகள் குறித்தும் அவர் கலந்தாலோசித்தனர்.