Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd February 2022 10:36:31 Hours

இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையினரின் தயாரிப்பிலான அதிநவீன கண்ணி வெடி எதிர்ப்பு யுனிகோப் வாகனம்

இராணுவத்தின் முன்னோக்கு மூலோபாய திட்டம் 2020-2025 க்கு அமைவாக, இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் படையினரால் தயாரிக்கப்பட்ட அதிநவீன கண்ணி வெடி எதிர்ப்பு கொண்ட சர்வதேச தரத்திலான புதிய 'யுனிகோப்' வாகனமானது எதிர் வரும் சுதந்திர தின அணிவகுப்பில் காட்சிப் படுத்தப்படவுள்ள நிலையில், திங்கட்கிழமை (31) பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா முன்னிலையில் இராணுவத் தலைமையகத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் சிப்பாய்களின் ஆக்கப்பூர்வ உற்பத்தித் திறனுக்காக புதிய ஆறுகொள்ளலவு டீசல் யூனிகோப்-எம்ஆர்ஏபி என்ற வாகனம், இராணுவத்தால் முன்பு பயன்படுத்தப்பட்டு கைவிடப்பட்ட என்ஜின்கள், அகற்றப்பட்ட மற்றும் செசிஸ்கள் ஆகியவற்றினைக் கொண்டு தயாரிக்கப்பட்டது. இலகுரக கவச வாகனப் பிரிவின் கீழ் இலங்கை கவசப் படையணியின் கவச திறன்கள் அதிகரிக்கும்.

புதிய வாகனத்தை உண்ணிப்பாக பரிசோதித்த ஜெனரல் ஷவேந்திர சில்வா அதன் இயந்திரவியல் மற்றும் பொறியியல் அம்சங்கள், கடினமான நிலப்பரப்புகளுக்கான சாத்தியக்கூறுகள், வெளிநாட்டு சந்தைகளுக்கான பாரிய உற்பத்திக்கான சாத்தியங்கள், செயல்பாட்டு திறன்கள் மற்றும் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் சிப்பாய்களின் கடின உழைப்பு, நிபுணத்துவம் மற்றும் ஆக்கப்பூர்வமான திறன்கள் தொடர்பாக வினவினார்.

இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் தளபதியும் மற்றும் இராணுவ வழங்கள் தளபதியுமான மேஜர் ஜெனரல் இந்து சமரகோன் அவர்கள் 61 வது படைப்பிரிவின் தளபதியும் இலங்கை கவச படையணியின் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஸ்வர்ண போதோட்ட, இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பாளர் பிரிகேடியர் தீபால் ஹத்துருசிங்க மற்றும் கவச வாகன பிரிகேட் தலைமையக தளபதி பிரிகேடியர் அனில் பீரிஸ் ஆகியோருடன் இணைந்து இந்த திட்டத்திற்கான ஒத்துழைப்பு மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கினார்.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட யூனிகோப்-எம்ஆர்ஏபி வாகனம், 9 போர் வீரர்களுக்கான திறன் , 12.7 மெஷின் கன் 4 x 4 ஆல் வீல் டிரைவ் கொண்ட அதிக வேகம் /ஆஃப் ரோடு, வாகனத்தில் பொருத்தப்பட்ட கெமராக்கள் கொண்ட அனைத்து திசை கண்காணிப்பு திரன் உள்ளிட்ட பல அம்சங்களைக் கொண்டுள்ளதுடன் கெமரா அமைப்பு மற்றும் ஜிபிஎஸ் கண்காணிப்புடன் கூடிய சமகால கண்காணிப்புத் திறன்களைக் கட்டளையிடும் புலம், தொலைதூரத் தொடர்புத் திறன், உள்நாட்டில் கிடைக்கும் உதிரிபாகங்களுடன் குறைவான பராமரிப்புச் செலவுகள், இறக்குமதி செய்யப்பட்ட கவசப் வாகனங்களுடன் ஒப்பிடுகையில் குறைவான உற்பத்திசெலவு, குளிரூட்டப்பட்ட அரை உட்பட பல வசதிகள் காணப்படுகின்றன. அதன் உற்பத்தி செலவு ரூ. 10 மில்லியனாக உள்ளது, இது இறக்குமதியுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்த செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய வருடங்களில் இராணுவத்தின் ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் பணிகளுக்காக யுனிபபல்ஸ் (Unibuffels) வாகனங்களை (யூனிகோனின் மேம்படுத்தப்பட்ட தயாரிப்பு) தயாரிப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்த இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் படையினர் ஏற்கனவே மாலி நாட்டுக்கு 65 க்கும் மேற்பட்ட வாகனங்களை அனுப்பி நாட்டிற்கு அந்நியச்செலாவனியை சேமித்துள்ளது. இராணுவத் தளபதியின் அறிவுறுத்தல்களின்படி இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியானது, கடந்த காலத்தில் செய்தது போல், வெளிநாட்டு பணிகளுக்காக வடிவமைக்கப்பட்ட புதிய யுனிகோப்-எம்ஆர்ஏபி வாகனங்களில் அதிகமானவற்றை உற்பத்தி செய்ய எதிர்பார்த்துள்ளது.

இந்த நிகழ்வில் சில சிரேஷ்ட அதிகாரிகள், இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே, இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு, வழங்கள் தளபதியும் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணின் தளபதியுமான மேஜர் ஜெனரல் இந்து சமரகோன் ஆகியோர் கலந்துகொண்டனர்.