Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

பணிச்சங்கேணி கிராம மக்களுக்கு இராணுவ ஒருங்கிணைப்பின் மூலம் உதவி

கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 23 வது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 233 வது பிரிகேட் படையினர் தமது பொறுப்புப் பகுதியில் உள்ள வறுமை நிலைமையை கருத்தில் கொண்டு, மட்டக்களப்பு, பணிச்சங்கேணி ஏழைக் குடும்பங்களுக்கு தலா 6,000/= பெறுமதியான 20 உலர் உணவுப் பொதிகளை திங்கட்கிழமை (17) பகிர்ந்தளித்தனர்.

233 வது பிரிகேட் தளபதி கேணல் வசந்த ஹேவகே அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, குருநாகலை வர்த்தகர் திரு சுரேஷ் அவர்கள் வழங்கிய நன்கொடையுதவியினால் இந்த சமூக நல திட்டம் படையினாரால் நிறைவேற்றப்பட்டது.

233 வது பிரிகேட் தளபதி, 233 வது பிரிகேட் சிவில் ஒருங்கிணைப்பு அதிகாரி, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.