Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th January 2022 10:10:46 Hours

முதலாவது படையணி 'நேர்மறையான சிந்தனையின் அணுகுமுறைகள் மற்றும் வடிவங்கள்' பற்றிய திட்டம்

உளவியல் நடவடிக்கை பணிப்பகத்தினால் ஆரம்பிக்கப்பட்ட இராணுவ சாரதிகள் மற்றும் சிவில் ஊழியர்களுக்கான 'மனப்பான்மை மற்றும் நேர்சிந்தனை முறைகள்' பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி 08 ஜனவரி 2022 அன்று கிளிநொச்சியில் உள்ள முதலாவது படையணியின் தலைமையகத்தில் மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இராணுவ சாரதிகள் மற்றும் சிவில் ஊழியர்களின் செயல்திறனை அதிகரிக்க நேர் சிந்தனையின் அணுகுமுறைகள் மற்றும் வடிவங்களை வளர்ப்பதற்கு இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. பயிற்சி அமர்வை உளவியல் நடவடிக்கை பணிப்பகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி லெப்டினன் கேணல் ராஜி ஜுமர் என்பவரால் இந்த அமர்வு நடாத்தப்பட்டது. முதலாவது படையணியின் தலைமையகத்தின் கட்டளையின் கீ்ழ் உள்ள அலகுகள், 57 மற்றும் 66 படைப்பிரிவுகள் ஆகியவற்றினை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 31 சிப்பாய்கள் மற்றும் 60 சிவில் பணியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

மேலும் வீதி விபத்துகளைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள், வீதி ஒழுக்கம் பற்றிய விழிப்புணர்வு, வீதி சமிக்ஞைகளைப் பயன்படுத்துதல் மற்றும் நல்ல சாரதிக்கான நடத்தை பற்றிய கல்வி அறிவினையையும் சிவில் ஊழியர்களுக்கு தங்கள் கடமைகளை எப்படி உற்சாகமாகச் செய்வது மற்றும் அவர்களின் பங்கின் மதிப்பு குறித்தும் கற்பிக்கப்பட்டது இந்நிகழ்வில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்கள் இந்த அமர்வினை மிகவும் பாராட்டினர், மேலும் பங்கேற்பாளர்களின் கருத்துகளால் இது உறுதிப்படுத்தப்பட்டதுடன் கொவிட்-19 சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது