Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th January 2022 18:55:56 Hours

இராணுவத்தின் பண்ணையில் பணிபுரியும் யாழ் படையினருக்கு பரிசுப் பொதிகள்

உலகெங்கிலும் உள்ள இந்துக்களால் கொண்டாடப்படும் சிறப்பு 'தைப் பொங்கல்' தினத்தை முன்னிட்டு யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக படையினரால் நிர்வகிக்கப்படும் பலாலி பண்ணைக்குள் பணிக்காக இணைத்துகொள்ளப்பட்ட 108 இராணுவ சிப்பாய்களுக்கான இலவச உலர் உணவுப் பொதிகள் ஞாயிற்றுக்கிழமை (9) வழங்கப்பட்டன.

யாழ் பாதுகாப்புப் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா அவர்கள் பரிசுப் பொதிகளை வழங்கி வைத்திபின்னர் யாழ் குடாநாட்டில் வசிக்கும் அவர்களின் குடும்பத்தாரின் நலன்கள் தொடர்பாக விசாரித்ததுடன் தைப் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.

மேலும் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி, குறித்த சிப்பாய்களிடம் யாழ் பாதுகாப்பு படைத் பண்ணையில் சேதன பசளையை பயன்படுத்தி, அதன் உற்பத்திகளை அதிகரித்து, யாழ் குடாநாட்டின் சிறந்த பண்ணையாக மாற்றியமைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். அதற்கமைய பண்டிகையை முன்னிட்டு வழங்கப்பட்ட நன்கொடைக்கும் அவர்களின் சிந்தனை மற்றும் தாராள மனப்பான்மைக்கு தளபதியவர்களுக்கு தங்களது நன்றிகளை தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொது பணி பிரிகேடியர் சஷிக பெரேரா உட்பட சில சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படையினர் பலர் கலந்து கொண்டதுடன் இந் நிகழ்வு சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய இடம் பெற்றது என்பது குறிப்பிடதக்கது.