Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th January 2022 06:30:44 Hours

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி பரீட்சாத்த விஜயம்

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியும் மற்றும் பசுமை விவசாய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், யாழ் குடாநாட்டில் 'பசுமை விவசாயத்தை' ஊக்குவிப்பதற்காக ஏற்கனவே பசளை உற்பத்தி செயல்முறையை ஆரம்பித்துள்ள யாழ் பாதுகாப்புப் படைத்தலைமையகத்தின் பசளை உற்பத்தி பகுதிகளுக்கு சனிக்கிழமை (8) யாழ் பாதுகாப்பு படைத் தளபதி விஜயத்தை மேற் கொண்டு அத்தளங்களைப் பார்வையிட்டார்.

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் மேற் கொள்ளும் சேதன பசளை உற்பத்தித் தளத்தைப் முதலில் பார்வையிட்ட அவர் ஏனைய தளங்களையும் பார்வையிட்டதுடன் குறித்த உற்பத்தி செயன்முறைகளை மேம்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடினார்.

இந்த விஜயத்தின் போது பிரிகேடியர் பொது பதவி நிலை அதிகாரி பிரிகேடியர் சசிக பெரேரா மற்றும் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் பலர் இணைந்து கொண்டனர்.