Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th January 2022 12:30:35 Hours

நாகதீபத்தை வழிப்பட்ட பின்னர் யாழ். தளபதி மாவட்ட செயலாளருடன் சந்திப்பு

அண்மையில் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா வெள்ளிக்கிழமை (7) வரலாற்றுச் சிறப்புமிக்க நாக விகாரைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதோடு விகாரையின் தலைமை தேரரான நவடகல பதுமகித்திதிஸ்ஸ தேரரிடம் ஆசிகளை பெற்றுகொண்டார்.

இதன்போது 51 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க மற்றும் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொதுப்பணி மற்றும் சில சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

அதனையடுத்து, (07) யாழ்ப்பாண மாவட்டச் செயலாளரை மரியாதை நிமித்தமாக சந்தித்திருந்த தளபதியவர்கள் கொவிட் - 19 கட்டுப்பாட்டுச் செயற்பாடுகளின் ஒருங்கிணைப்பு, சிவில் ஒருங்கிணைப்புச் செயற்பாடுகளுடனான முன்னேற்றம், காணி விடுவிப்பு நடவடிக்கைகள், யாழ்ப்பாண தீபகற்பத்தில் நல்லிணக்கம் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.

மேலும், சட்டவிரோத மரம் வெட்டுதல், மணல் அகழ்வு, போதைப்பொருள் கடத்தல் போன்ற சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதோடு, அதற்காக இராணுவம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கும் மாவட்டச் செயலாளர் பாராட்டு தெரிவித்தார்.

51 வது படைப்பிரிவு தளபதி, பிரிகேடியர் பொதுப்பணி, 512 வது பிரிகேட் தளபதி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோரும் மேற்படி விஜயங்களின் போது கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.