Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th January 2022 10:15:56 Hours

பூநகரி படையினரால் 100 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு

பூநகரி 66 வது படைப்பிரிவின் 661 வது பிரிகேட் படையினர், ஹட்டன் நஷனல் வங்கியின் அனுசரணையுடன் மேலும் ஒரு சிவில் மற்றும் இராணுவ ஒத்துழைப்புத் திட்டத்தை செவ்வாய்கிழமை (4) நடைமுறைப்படுத்தினர்.

பரமன்கீரை தமிழ்க் கலவன் பாடசாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியின் முலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 பாடசாலைகளை சேர்ந்த 100 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், புத்தகங்கள் உள்ளிட்ட சில அத்தியாவசியப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

66 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ அவர்களின் அழைப்பின் பேரில் பரிசுப் பொதிகளை விநியோகிக்கும் நிகழ்வில் முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கலந்துகொண்டார்.

இந் நிகழ்வின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகம் மற்றும் 66 வது படைப்பிரிவின் அதிகாரிகள் மற்றும் படையினர் கலந்துகொண்டனர். சுகாதார வழிகாட்டுதல்களுக்கமைய இந் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.