29th December 2021 15:00:06 Hours
கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் லால் சந்திரசிறி அவர்கள் அண்மையில் பதவியேற்றதன் பின்னர் டிசம்பர் 26 - 27 ஆம் திகதிகளில் 231 வது பிரிகேட் கட்டளை அலகுகளுக்கான தனது முதல் விஜயங்களை மேற்கொண்டார்.
கிழக்கு பாதுகாப்புப் படை புதிய தளபதி 231 வது பிரிகேட்டை வந்தடைந்தவுடன் 231 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் திலுப பண்டார அவர்களால் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் தளபதி 23 வது படைப்பிரிவின் கீழ் உள்ள பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் படை வீரர்களை சந்தித்து பேசினார். பின்னர், படைப்பிரிவு மற்றும் அதன் கட்டளையின் கீழ் உள்ள அமைப்புக்களின் தலைவர்களால் அவர்களின் பொறுப்பு வகிபங்கு மற்றும் பணிகள் பற்றிய விரிவான விளக்கமளிக்கப்பட்டது. தளபதி புறப்படுவதற்கு முன் விருந்தினர் பதிவேட்டில் தனது எண்ணங்களை பதிவிட்டார்.
தளபதி, 11 (தொ) வது இலங்கை சிங்கப் படைப்பிரிவுக்கு 27ம் திகதி விஜயம் செய்கையில் அதன் கட்டளை அதிகாரியினால் வரவேற்கப்பட்டார். பின்னர் உன்னாச்சி 4 வது கெமுனு படையணிக்கு விஜயம் மேற்கொண்ட அவர் அங்கு போரில் உயிர் நீத்த படையினருக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.
இவ் விஜயத்தின் அடையாளமாக, இரண்டு படையலகுகளிலும் பிரிவுகளின் மரக்கன்றுகள் தளபதியினால் நடப்பட்டது.
23 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நளின் கொஸ்வத்த, 231 வது பிரிகேட் தளபதி, 4 வது கெமுனு படையணி மற்றும் 11 வது (தொ) இலங்கை சிங்க படையணி ஆகியவற்றின் கட்டளை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இக் கள விஜயத்தின் போது இணைந்துகொண்டனர்.