29th December 2021 15:18:06 Hours
சீதாவக்க இலங்கை இராணுவ தொண்டர் படையணி வளாகத்தில் மகா சங்கத்தினரின் செத் பிரித் பாராயணங்களுக்கு மத்தியில் சமிக்ஞை தொடர்பாடல் நிலையத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு திங்கட்கிழமை (27) இடம்பெற்றது.
இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அவர்களினால் மேற்படி படை வளாகத்தில் நீண்ட கால அவசியமாக காணப்பட்ட மேற்படி தொடர்பாடல் நிலையத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
படையணி வளாகத்தில் காணப்படும் தொடர்பாடல் கோபுரத்தை அண்மித்த சூழலில் தொடர்பாடல் செயற்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்த தொடர்பாடல் கோபுரம் நிறுவப்பட்டுள்ளதோடு, சமிக்ஞை பரிமாற்றத்திற்கான பாதுகாப்பு மற்றும் படை வளாகத்திற்கு அத்தியாவசிய தொடர்பாடல் உபகரணங்களை பாதுகாப்பதற்காகவும் இந்த கட்டிடம் நிறுவப்பட்டுள்ளது.
கொவிட் – 19 தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கான வழிகாட்டல்களை பின்பற்றி இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டிருந்தனர்.