29th December 2021 18:47:47 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 56 வது படைப்பிரிவின் 26 வது தளபதியாக மேஜர் ஜெனரல் சமன் லியனகே அவர்கள் திங்கட்கிழமை (20) மகா சங்கத்தினரின் செத் பிரித் பாராயணங்களுக்கு மத்தியில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் பணி நிலை அதிகாரிகள் உரிய சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி கலந்துகொண்டிருந்தனர். இதன்போது உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட அவர் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களிடம் தனது எதிர்கால பணி நோக்கங்கள் தொடர்பில் எடுத்துரைத்தார்.