28th December 2021 08:45:07 Hours
சிறந்த நல்லிணக்கத்தை வலுப்படும் நோக்கில், 233 வது பிரிகேட், 7 வது இலங்கை இலேசாயுத காலாட்படையணி மற்றும் 6 வது கஜபா படையணி சிப்பாய்கள் இணைந்து 2021 டிசம்பர் 19 வாகறை மகா வித்தியாலய வளாகத்தில் மேற்கொண்ட சிரமதான பணிகளை தொடர்ந்து பாடசாலை மாணவர்களுக்கான புத்தக பைகளை அன்பளிப்புச் செய்யும் நிகழ்வினையும் ஏற்பாடு செய்தனர். அதேநேரம் நட்புறவு அடிப்படையிலான கிரிக்கட் சுற்றுப் போட்டியொன்றிலும் இணைந்துகொண்டனர்.
இராணுவத்திற்கும் பொது மக்களுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இத்திட்டத்தின் போது, அபான்ஸ் நிதி நிறுவனத்தின் நிதி உதவியை கொண்டு மேற்கொள்ளப்பட்ட சிரமதான பணிகளை தொடர்ந்து இடம்பெற்ற புத்தக பைகளை அன்பளிப்புச் செய்யும் நிகழ்விற்கு இணையாக சிநேகபூர்வமான கிரிக்கெட் சுற்றுப் போட்டிகளும் நடத்தப்பட்டன.
சிறுவர்களுக்கு உதவுவதற்கான இத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக நன்கொடையாளர் முன்வந்ததை தொடர்ந்து 233 பிரிகேட் தளபதி கேணல் வசந்த ஹேவகே அவர்களால் திட்டத்தை முன்னெடுப்பதற்கான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன.
233 வது பிரிகேட், 7 வது இலங்கை பீரங்கி படையணி மற்றும் 6 வது கஜபா படையணியின் சிப்பாய்கள், அபான்ஸ் நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர், வாகறை மகா வித்தியாலயத்தின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மேற்படி நிகழ்வில் பங்குபற்றினர்.