27th December 2021 12:13:15 Hours
இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் பிரிகேடியர் ஈஏபி எதிரிவீர அவர்கள் கொஹூவலையிலுள்ள ஆட்சேர்பு பணிப்பகத்தின் பணிப்பாளராக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிய தளபதியவர்கள் மத அனுட்டானங்களுக்கு மத்தியில் பதவியேற்புக்கான உத்தியோகபூர்வ ஆவணங்களில் கையொப்பமிட்டார். இதற்கு முன்னதாக அவர் 112வது பிரிகேட் தளபதியாக நியமனம் வகித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்வில் பணிப்பகத்தின் பணி நிலை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் கலந்துகொண்டிருந்ததோடு மேற்படி அதிகாரிக்கு முன்பாக குறித்த நியமனத்தை வகித்த பிரிகேடியர் ஜானக்க விமலரத்ன கெமுனு ஹேவா படையணியின் நிலையத் தளபதியாக நியமனம் வகிக்கிறார்.