Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th December 2021 11:43:16 Hours

663 வது பிரிகேட் தலைமையகத்தின் நிதி உதவியுடன் 200 வறிய மாணவர்களுக்கு நிவாரணத் திட்டங்கள்

இராணுவத்தினரின் கோரிக்கைக்கமைய கிளிநொச்சி ஹட்டன் நெஷனல் வங்கியினால் வழங்கப்பட்ட நிதி உதவியை கொண்டு, கிளிநொச்சி வெருவில் வித்தியாலயம் மற்றும் வாழைப்பாடு றோமன் கத்தோலிக்க கல்லூரியில் கல்வி பயிலும் 200 வறிய மாணவர்களுக்கு 400,000 பெறுமதியான பாடப்புத்தகங்கள் மற்றும் கற்றல் உபகரணங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டன. மேற்படி சமூக பணியானது பூநகரியில் அமைந்துள்ள 66 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவின் வழிகாட்டலுக்கமைய 663 வது பிரிகேடினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வின் ஆரம்பக கட்ட புத்தக விநியோக திட்டமானது, சனிக்கிழமை (18) தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு புத்தங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு 66 வது படைப்பிரிவு தளபதியவர்களின் தலைமையில் நடைபெற்றதோடு இத்திட்டத்திற்கு நன்கொடை அளித்த நிறுவனமாக ஹட்டன் நெஷனல் வங்கி நிறுவனத்தின் பிரதி பொது முகாமையாளர் திரு தமித் பல்லேவத்த மற்றும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகளும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அதேநேரத்தில் நன்கொடையாளர்களினால் வாழைப்படு றோமன் கத்தோலிக்கக் கல்லூரியில் மாணவர்களுக்கான குடிநீர் வசதியை வழங்குவதற்கான சாத்தியபாடுகளை ஆராய்ந்த பின்னர் அதற்கான ஆரம்பகட்ட பணிகளை முன்னெடுப்பதற்கான 2 மில்லியன் ரூபாய் உதவித்தொகையும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் 663 வது பிரிகேட் தளபதி பிரி கேடியர் கேஎச்என்பீ ஹென்னதிகே, 66 வது படைப்பிரிவின் பணிநிலை அதிகாரி 11வது ( தொண்) கஜபா படையணியின் கட்டளை அதிகாரி மற்றும் 2 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையினர் மேற்படி பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோரும் உரிய சுகாதார ஒழுங்குமுறைகளை பின்பற்றி கலந்துகொண்டிருந்தனர்.