26th December 2021 09:29:10 Hours
இராணுவத் தளபதி வழங்கிய வழிகாட்டுதலின் பேரில் புனர்வாழ்வு பணிப்பகம் மற்றும் ஏனைய பணிப்பகங்ளினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டுப் பட்டறை அண்மையில் கணேமுல்ல கமாண்டோ படையணி மையத்தில் இடம் பெற்றது.
இந்ந பட்டறையில கம்பஹா மாவட்டத்தில் மருத்துவ ரீதியாக வெளியேறிய மற்றும் முழுமையாக ஊனமுற்ற போர்வீரர்களின் நலன்புரி பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
ஆளனி நிர்வாகம், ஊதியம் மற்றும் பதிவுகள், மருத்துவ சேவைகள், நலன்புரி , படைவீரர் விவகாரங்கள், சட்ட சேவைகள் ஆகிய பணிப்பகங்களின் உறுப்பினர்கள் மற்றும் ரணவிரு செவன ராகம மருத்துவ பணியாளர்கள் ஆகியோர்கள் குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
புனர்வாழ்வு பணிப்பாளர் பிரிகேடியர் துஷான் சேனாரத்ன, பிரதி புனர்வாழ்வு பணிப்பாளர் பிரிகேடியர் பி.டி.ஏ.ஜி சேனாதீர மற்றும் சில சிரேஷ்ட அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தினர்.