Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th December 2021 22:00:14 Hours

வன்னிப் படையினர் தேவையுடைய குடும்பத்திற்கு மேலும் ஒரு வீடு அன்பளிப்பு

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகம் தனது சமூக சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில் அனுராதபுரம் மாவட்டத்தில் பேமடுவையில் ஆதரவற்ற குடும்பம் ஒன்றிற்கு மேலும் ஒரு வீட்டை நிர்மாணித்து அதனை பயனாளிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (19) சிறு வைபவத்தின் ஊடாக கையளித்தது.

இராணுவத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, திருமதி நிலாந்தி குணதிலக்க, முழு திட்டத்திற்கும் அனுசரணை வழங்க முன்வந்தார். 21 ஆவது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் மொஹான் ரத்நாயக்க அவர்களின் அழைப்பின் பேரில் 5 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீட்டின் திறப்பு விழா நிகழ்வில் பிரதம அதிதியாக மேற்கு பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சம்பக்க ரணசிங்க கலந்து கொண்டார்.

அனுராதபுர மாவட்டத்தின் 13 வது மைல், பண்டாரகம, பேமதுவவில் வசிக்கும் பயனாளியான திரு. எஸ்.எம்.ஜனக செனரத் பண்டார மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சுப நிமிடத்தில் புதிய வீட்டிக்கான சாவியை அன்றைய தினம் பிரதம அதிதியாகக் கலந்துக்கொண்டு பெயர் பலகையை திரைநீக்கம் செய்து வைத்தார்.

இராணுவத் தளபதியின் முன்னோக்கிய மூலோபாய திட்டம் 2020 – 2025 ‘உடன் ஒத்துப்போகும் இந்தத் திட்டம், வன்னிப் பிராந்தியத்தில் தகுதியான குடும்பங்களுக்காக முன்னெடுக்கும் வீடு நிர்மாணத் திட்டத்தின் நீட்சியாகும்.

மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் பால் பொங்குதல் மற்றும் பிற சடங்குகள் தொடர்ந்தன. எளிமையான ஏற்பாட்டின் போது சுகாதார வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட்டன.