20th December 2021 07:13:41 Hours
தியதலாவ இராணுவ கல்வியற் கல்லூரியில் இன்று (19) காலை இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்த பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் இராணுவ கல்வியற் கல்லூரி பயிலிளவல் அதிகாரிகளுக்காக நிர்மாணிக்கப்பட்ட தங்குமிட வசதிகள் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.
ஜெனரல் சவேந்திர சில்வா சிரேஷ்ட பயிலிளவல் அதிகாரிகளுக்கான கட்டிடத் தொகுதி' என பெயரிடப்பட்டுள்ள குறித்த கட்டித்ததின் பெயர் பலகையை திரைநீக்கம் செய்து வைத்தார்.
புதிய இரண்டு மாடி பயிலிளவல் அதிகாரி தங்குமிட கட்டிடம் 22 அறைகள் மற்றும் பயிற்சிக்கான அனைத்து வசதிகளையும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இக்கட்டிடம் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் ஆலோசணைக்கு அமைவாக கலையம்சம் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
பொறியியல் சேவைப் படையணியின் படையினரால்ல் ஆளணி வளம் மற்றும் தொழில்நுட்பத் திறனை பயன்படுத்தி நிர்மாணிக்கப்பட்ட இந்த கட்டித்தை திறந்து வைத்த பின்னர் நிர்மாண பணிகளில் ஈடுபட்ட சிப்பாய்களுக்கு தளபதி பாராட்டுக்களை தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இராணுவ பதவி நிலை பிரதானி, பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி, இலங்கை இராணுவ தொண்டர் படையின் தளபதி, இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியி முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.