16th December 2021 13:24:43 Hours
இராணுவ தலைமையக திட்டமிடல் பணி்ப்பகத்தின் 24 வது பணிப்பாளராக இலங்கை பொறியியல் படையணியின் பிரிகேடியர் செவாந்த் குலத்துங்க அவர்கள் (14) செவ்வாய்கிழமை அலுவலக கடமைகளை பொறுப்பபேற்றார்.
மகா சங்கத்தினரின் ஆசிர்வாதங்களுடன் பிரிகேடியர் செவாந்த் குலத்துங்க அலுவலக கடமைகளை பொறுப்பேற்பதற்கான உத்தியோகபூர்வ ஆவணங்களில் கையொப்பமிட்டார்.
மேற்படி நியமனத்தை பொறுப்பேற்கு முன்னதாக பிரிகேடியர் செவாந்த் குலத்துங்க அவர்கள் பாகிஸ்தானில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு இணைப்பாளராக கடமையாற்றினார். இவர் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பிரிகேடியர் ஜயந்த பாலசூரிய அவருக்கு பதிலாக புதிய நியமனத்தை ஏற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடதக்க விடயம்.
இந் நிகழ்வில் பணிப்பகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், பதவி நிலை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.