16th December 2021 17:00:43 Hours
கெமுனு ஹேவா படையணியின் மேஜர் ஜெனரல் லால் சந்திரசிறி கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியாக புதன்கிழமை (15) மத அனுட்டானங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கமைவாக வெலிகந்தையிலுள்ள கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் கடமைகளை பொறுப்பேற்றுகொண்டார்.
இதன்போது வருகை தந்த கிழக்கு தலைமையகத்தின் புதிய தளபதிக்கு நுழைவாயில் வளாகத்தில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதோடு, கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொதுப்பணி பிரிகேடியர் சுஜீவ ஜயசிங்க அவர்களால் வரவேற்பளிக்கப்பட்டதுடன் படையினரால் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.
அதனையடுத்து மகா சங்கத்தினரின் செத் பிரித் பாராயணங்களுக்கு மத்தியில் மேஜர் ஜெனரல் லால் சந்திரசிறி அவர்கள் கடமைகளை பொறுப்பேற்றுகொள்வதற்கான உத்தியோகபூர்வ ஆவணங்களில் கையொப்பமிட்டார். பின்னர் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள படைப்பிரிவு தளபதிகள், பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள் பணிநிலை அதிகாரிகளுடன் குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்விலும் கலந்துகொண்டார்.
கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட தளபதியவர்கள் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிப்பாய்களுக்கு ஆற்றிய உரையின் போது ஒன்றிணைந்து பணியாற்றுதல், அர்ப்பணிப்பு மற்றும் சுய ஆரோக்கியத்தை மேம்படுத்திகொள்ளல் என்பன தொடர்பிலான அறிவுரைகளையும் வழங்கினார். அதேநேரம் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தலைமையகத்தின் கீழ் பணியாற்றுகின்ற போது சுமூகமாக பணிகளை மேற்கொள்ளுதல் மற்றும் இராணுவத்தின் விம்பத்தை சீர்குலையாமல் பாதுகாத்தல் அதன் தர நிலைகளை பேணுதல் என்பவற்றின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
புதிய நியமனத்தை பெற்றுக்கொள்ளும் முன்பாக கெமுனு ஹேவா படையணியின் படைத் தளபதியாக நியமனம் வகித்த மேஜர் ஜெனரல் லால் சந்திரசிறி அவர்கள் இராணுவ தலைமையகத்தின் பாதுகாப்பு இணைப்பாளர் மற்றும் காலாட் படை பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட பதவிகளையும் வகித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.