Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th December 2021 21:11:41 Hours

வயாவிலானில் முதல் ஆட்சேர்ப்பு பயிற்சிகள் ஆரம்பம்

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள யாழ்ப்பாணம் வயாவிலான் படையலகு பயிற்சிப் பாடசாலையில் 360 தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள சிப்பாய்களை இணைத்துகொள்வதற்கான முதற்கட்ட பயிற்சிகள் 51 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க தலைமையில் நேற்று திங்கட்கிழமை (13) ஆரம்பமானது.

“2020 - 2025 முன்நகர்விற்கான மூலோபாய திட்டமிடல்” க்கு அமைவாக யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு அவர்களின் வழிகாட்டலின் கீழ் நான்கு மாத ஆட்சேர்ப்பு பயிற்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

51 ஆவது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டிருந்ததோடு, ஆரம்ப உரையையும் நிகழ்த்தினார். இதன்போது , சிவில் வாழ்க்கையிலிருந்து இராணுவத்திற்கு மாற்றும் செயல்முறைக்கு அடிப்படை இராணுவப் பயிற்சியின் முக்கிய அம்சங்கள் தொடர்பாக அவர் வலியுறுத்தினார்.

பயிற்சியாளர்களின் பயிற்சிக் காலத்தில் அவர்களின் பொறுப்புகள் மற்றும் இராணுவப் பயிற்சியைப் பின்பற்றுவதற்கான ஒழுக்கம், நடத்தை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.

குடாநாட்டில் வயாவிலான் படையலகு பயிற்சிப் பாடசாலையில் முதன் முதலாக தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள இளைஞர்களை உள்ளடக்கிய குழு நாட்டின் அனைத்து பயிற்சிக்கான இணைத்துகொள்ளப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். இந்த பாடநெறியானது 51 வது படைப்பிரிவு தளபதியவர்களின் கண்காணிப்பின் கீழ் 2022 ஏப்ரல் மாதம் வரையில் இடம்பெறவுள்ளது.

511, 513 மற்றும் 515 பிரிகேடுகளின் தளபதிகள், யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் 51 ஆவது படைப்பிரிவின் பணிநிலை அதிகாரிகள் படையலகு பயிற்சிப் பாடசாலையின் தலைமைப் பயிற்றுவிப்பாளர், யாழ். பாதுகாப்பு தலைமையகத்தின் கட்டளை அலகுகளின் கட்டளை அதிகாரிகள் மற்றும் பாடசாலையின் ஏனைய பயிற்றுவிப்பாளர்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.