Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th December 2021 17:34:41 Hours

யாழிலுள்ள முன்னாள் போராளியின் தொண்டு நிறுவனத்திற்கு கணினிகள் பரிசளிப்பு

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் வெற்றிலைக்கேணி பகுதியில் முன்னாள் போராளியொருவரால் நடத்திச் செல்லப்படும் விசிட் கல்வி நிலையம் ஒன்றின் மாணவர்களது தகவல் தொழில்நுட்ப திறனை மேம்படுத்தும் நோக்கில் 5 மேசைக் கனிணிகள் மற்றும் கனிணி மேசைகள், நாற்காலிகள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டன.

இத்திட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 55 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஜயவர்தன அவர்களின் ஒருங்கிணைபில் இடம்பெற்ற நிகழ்விற்கு கிளிநொச்சி கொமர்ஷல் வங்கியும் பங்களிப்புக்களை வழங்கியது.

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு முன்னரான மனிதாபிமான நடவடிக்கையின் இறுதி கட்டத்தின் போது இரு கரங்களையும் இழந்த நிலையில் ஊனமுற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண் போராளியான திருமதி செபஸ்தியன் புள்ளே செல்வகாயகீ, வறிய மாணவர்களின் நலனுக்காக இந்த நிறுவனத்தை சில காலமாக இலவசமாக நடத்தி வருகிறார்.

இது குறித்து அறிந்து கொண்டதையடுத்து அங்கு பயிலும் சிறுவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் மேற்படி உதவிகள் வழங்கப்பட்டன.

யாழ்ப்பாணத்திலுள்ள நெச்சுரல் பார்க் விடுமுறை விடுதியில் திங்கட்கிழமை (13) இடம்பெற்ற நிகழ்வின் போது, சிரேஷ்ட அதிகாரிகளின் முன்னிலையில்,யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு அவர்களினால் திருமதி செபஸ்தியன் புள்ளே செல்வகயாகியிடம் கணினிகள் மற்றும் தளபாடங்கள் சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டன. இந்நிகழ்வில் மேஜர் ஜெனரல் மஹிந்த ஜயவர்தன மற்றும் யாழ். தலைமையகத்தின் பிரிகேடியர் பொதுப்பணி உட்பட ஊழியர்களும் கலந்துகொண்டிருந்தனர்.