15th December 2021 12:00:12 Hours
யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு அவர்கள் இராணுவத் தலைமையகத்தில் புதிய நியமனம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து விடைப்பெற்றுச் செல்வதற்கு முன்னதாக திங்கட்கிழமை (13) 51, 52 மற்றும் 55 வது படைப்பிரிவு தலைமையகங்களுக்கு மரியாதை நிமித்தமான விஜயங்களை மேற்கொண்டிருந்தார்.
படையினரின் வரவேற்பை தொடர்ந்து படையினருக்கான உரையொன்றை நிகழ்த்திய யாழ். தளபதியவர்கள் தனது பதவிக்காலத்தில் படையினர் வழங்கிய ஒத்துழைப்புக்களுக்கு நன்றிகளை கூறிக்கொண்டார்.
இதன்போது தனது வருகையின் நினைவாக படைப்பிரிவு வளாகங்களில் மரக்கன்றுகளை நாட்டி வைத்த தளபதியவர்கள் படைப்பிரிவுகளின் தளபதிக்களுக்கு நன்றிகளையும் அவர்களின் எதிர்கால செயற்பாடுகளுக்கு வாழ்த்துக்களையும் கூறிக்கொண்டார்.