Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th December 2021 19:00:27 Hours

தொலைதூர ரோந்து பாடநெறி எண். 21 இன் பங்கேற்பாளர்கள் இலக்குகளை அறிதல் தொடர்பில் கற்கை

கொவிட் - 19 விதிமுறைகளுக்கு அமைவாக தொலைதூர ரோந்து பணிகள் தொடர்பிலான பாடநெறி எண் 21 இன் பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வுகள் டிசம்பர் 02ம் திகதி 3 வது சிறப்புப் படையணித் தலைமையகத்தில் நடைபெற்றது. இதன்போது அதிகாரியொருவர் மற்றும் 63 சிப்பாய்களின் பங்கேற்புடன் ஒன்பது மாதங்கள் இடம்பெற்ற பயிற்சி படிமுறைகளை தொடர்ச்சியாக பின்பற்றி நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

3 வது சிறப்புப் படைகளின் கட்டளை அதிகாரி மேஜர் ஜே ரத்நாயக்கவின் அழைப்பின் பேரில் பட்டமளிப்பு விழாவின் பிரதம அதிதியாக முதலாம் படையணியின் தளபதியும் சிறப்பு படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அவர்கள் கலந்துகொண்டிருந்ததோடு, சிறப்பு படை பிரிகேட் தளபதி பிரிகேடியர் துஷார மகாலேகம் சிறப்பு படையணியின் நிலையத் தளபதி கேணல் பிரசாட் ரண்துனு உட்பட சிறப்பு படையின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

பாடநெறியின் சிறந்த மாணவர் மற்றும் சிறந்த துப்பாக்கி சுடும் வீரர் விருது லெப்டினன்ட் ஆர்.டி.வி.ஜி சமர வீரவுக்கும், சிறந்த உடல் தகுதிக்கான விருது லான்ஸ் கோப்ரல் பிரதீப் குமாரவுக்கும் வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வின் போது புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடம் ஒன்றும் திறந்து வைக்கப்பட்டது.