14th December 2021 19:55:27 Hours
அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் உத்தரவின் பேரில் இந்த ஆண்டு மார்ச் மாதம் வழங்கப்பட்ட 14 வது ‘கம சமக பிலிசந்தர’ எனும் திட்டத்தின் கீ்ழ் 12 வது (தொ) பொறியியல் சேவை படையணியினரால் “சௌபக்கிய தெக்ம” எனும் தேசிய திட்டத்திற்கு அமைய சில நாட்களுக்கு முன்னர் 624 அடி நீளமான கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அதற்கமைய காலி மாவட்டத்தில் கலகொட கொலணியிலுள்ள கனிஷ்ட பாடசாலையின் விளையாட்டு மைதானத்தை சுற்றி 624 அடி நீள பக்கச்சுவர் மற்றும் 411 அடி நீள சங்கிலி இணைப்பு வேலிகள் அமைக்கப்பட்டன.
அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 8.7 மில்லியன் செலவில் நிறைவு செய்யப்படவுள்ள இத் திட்டமானது இராணுவத்தின் தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் ஆளணி வளத்தையும் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டது.
பிரதம களப் பொறியியலாளர் மேஜர் ஜெனரல் நிஹால் அமரசேகர மற்றும் பொறியியலாளர் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜேசுந்தர ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் இத்திட்டம் ஓரிரு மாதங்களில் நிறைவடையும் என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.