Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th December 2021 16:40:28 Hours

இராணுவ அதிகாரிகளுக்கான தொழில் மேம்பாட்டு நிலையத்தின் பயிற்சியாளர்களுடன் முதலாம் படையணி தளபதி அனுபவப் பகிர்வு

புத்தளவிலுள்ள அதிகாரிகளுக்கான தொழில் மேம்பாட்டு நிலையத்தில் கனிஷ்ட கட்டளை அதிகாரிகளுக்கான பாடநெறி எண் - 22 மற்றும் சிரேஷ்ட கட்டளை அதிகாரிகளுக்கான பாடநெறி எண் - 22 ஆகியவற்றை தொடரும் 98 பயிலியவள் அதிகாரிகளுக்காக நவம்பர் 29 அன்று விரிவுரையொன்றை நிகழ்த்திய முதலாம் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்தி ரணசிங்க 2021 இல் தலைமைத்துவ சவால்கள் மற்றும் தளபதி அனுபவங்கள் தொடர்பில் அறிவுறுத்தினார்.

இந்த விரிவுரையானது மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அவர்களின் 35 வருடகால போர்க்கள அனுபவம் மற்றும் அவரது இராணுவ வாழ்க்கையின் ஏனைய அங்கங்கள் தொடர்பிலான விடயங்களை உள்ளடக்கியதாக அமைந்திருந்தது.