13th December 2021 16:10:28 Hours
காலாட்படை பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமும் இராணுவ தலைமையக அனைத்து பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அதிகாரியுமான மேஜர் ஜெனரல் லால் சந்திரசிறி 2021 டிசம்பர் 07 ஆம் திகதி குறுவிட்டவில் அமைந்துள்ள கெமுனு ஹேவா படையணியின் 21 வது தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றுகொண்டார்.
மேஜர் ஜெனரல் லால் சந்திரசிறி அவர்கள் கெமுனு ஹேவா படையணியின் நிலையத் தளபதியினால் வரவேற்கப்பட்டதுடன், நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய நிகழ்வு ஆரம்பமானது.
பின்னர் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கான நினைவு தூபிக்கு அஞ்சலி செலுத்திய மேஜர் ஜெனரல் லால் சந்திரசிறி, ஹைலேண்டர்ஸ் பெரடைஸ் மண்டபத்தில் சிப்பாய்களுக்கான உரையொன்றையும் நிகழ்த்தினார்.
மேஜர் ஜெனரல் லால் சந்திரசிறி கொழும்பு திருத்துவ கல்லூரியின் மாணவராகிய அவர் 1987 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் இன்டேக் 28 இல் இணைந்தார். 1989 ஜூன் 23 ஆம் திகதி ஆணைபெற்ற அதிகாரியாக நியமிக்கப்பட்டு பின்னர் 4 வது கெமுனு ஹேவா படையணியில் இணைக்கப்பட்டார்.