13th December 2021 15:40:28 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 59 வது படைப்பிரிவின் 14 வது ஆண்டு நிறைவு தின நிகழ்வுகளை முன்னிட்டு, 19 வது கெமுனு ஹேவா படையணி மற்றும் 5 வது இலங்கை சிங்கப் படையணியின் படையினரால் 2 வது விஷேட படையணி தலைமையகத்தில் திங்கட்கிழமை (06) தடைதாண்டல் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இப்போட்டிகளின் சாம்பியன்ஷிப்பை 19 வது கெமுனு ஹேவா படையணியும் 2 ஆம் இடத்தை 5 (தொ) சிங்க படையணியும் பெற்றுக்கொண்டன.
அதனையடுத்து கெமுனு ஹேவா மற்றும் இலங்கை சிங்கப்படையணியின் வெற்றியாளர்களுக்கு 59 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் ஜீடி சூரியபண்டார அவர்களினால் கிண்ணங்களும் விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
592 வது பிரிகேட் தளபதி, 59 வது பிரிவின் கேணல் வழங்கல் மற்றும் நிர்வாகம், கட்டளை அதிகாரிகள் உட்பட மேலும் சில அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.