Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th December 2021 15:30:16 Hours

படையினரின் ஏற்பாட்டில் நாவட்குழி பகுதியில் நிவாரண பொதிகள்மற்றும் கற்றல் உபகரணங்கள் பகிர்ந்தளிப்பு

தேசிய மரபுரிமை பாதுகாப்பு அமைப்பின் ஏற்பாட்டில் யாழ். நாவட்குளி பகுதியிலுள்ள 25 குறைந்த வருமானும் பெரும் குடும்பங்கள் மற்றும் லக்தரு ஆரம்ப பிரிவு பாடசாலையில் கல்விகற்கும் 16 சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் உள்ளடங்கிய நிவாரண பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 52 வது படைப்பிரிவு தலைமையக தளபதி பிரிகேடியர் ஜீஜீஏஎஸ் விக்கிரமசேன அவர்களின் வழிகாட்டலுக்கமைய 52 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் ஒவ்வொன்றும் 3500/=. பெறுமதியான பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

மேற்படி பாடசாலையில் பயிலும் 16 சிறார்கள் இதன்போது பாடப் புத்தகங்களையும் பாடசாலை உபகரணங்களையும் பெற்றுகொண்டனர்.

523 வது பிரிகேட் தளபதி, 52 வது படைப்பிரிவின் கேணல் பொதுப்பணி, 12 வது கெமுனு ஹேவா படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் ஆகியோர் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி கலந்துகொண்டனர்.