Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th December 2021 17:00:57 Hours

மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே பொதுப்பணி பணிப்பாளர் நாயகமாக பொறுப்பேற்பு

விஜயபாகு காலாட் படையணியை சேர்ந்த மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே (13) காலை இராணுவ தலைமையக பொதுப்பணி பணிப்பககத்தின் பணிப்பாளர் நாயகமாக கடமைகளை பொறுப்பேற்று கொண்டார்.

இதன்போது மகா சங்கத்தினரின் செத் பிரித் பாராயணங்களுக்கு மத்தியில் புதிய பணிப்பாளர் நாயகம் கடமைகளை பொறுப்பேற்பதற்கான உத்தியோகபூர்வ ஆவணங்களில் கையொப்பமிட்டார்.

அண்மையில் இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்ணாண்டோ அவர்களுக்கு பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே அவர்கள் இராணுவ பயிற்சி கட்டளை மற்றும் விஜயபாகு காலாட் படையணியின் தளபதியாக நியமனம் வகிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

சிரேஷ்ட அதிகாரிகள், பணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள், பொதுப் என பலரும் இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தனர்.