Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th December 2021 12:15:05 Hours

மட்டுப்படுத்தப்பட்ட நிகழ்வுகளுடன் 59 வது படைப்பிரிவின் ஆண்டு நிறைவு விழா நிகழ்வுகள்

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் நந்திகடல் பகுதியில் அமைந்துள்ள 59 வது படைப்பிரிவு தலைமையகத்தின் 14 வது ஆண்டு பூர்த்தி நிகழ்வு குறைந்த அளவானோரின் பங்கேற்புடன் நவம்பர் 27- 30 ஆம் திகதிகளில் 59 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் டீ.ஜி சூரிய பண்டார அவர்களின் வழிகாட்டலுக்கமைய இடம்பெற்றது.

ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு கொடியேற்றம், சிப்பாய்களுக்கான உரை, கிரிக்கெட், பூப்பந்து,கரப்பந்து,காற்பந்து மற்றும் விழா காலத்திலேயே இடம்பெற்ற கிரிக்கெட் போட்டிகளின் வெற்றியாளர்களுக்கான கிண்ணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வுகள் என்பனவும் உரிய சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி நடத்தப்பட்டன.

59 வது படைப்பிரிவின் கீழ் உள்ள பிரிகேட் தளபதிகள் உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் ஆண்டுநிறைவு விழா நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.