08th December 2021 19:22:19 Hours
வன்னிப் பாதுகாப்புப் படைத் தலைமையகம் மற்றும் 21ஆவது பிரிவின் முயற்சியால் செட்டிக்குளம் பிரதேச செயலகப் பகுதியில் வசிக்கும் பின்தங்கிய குடும்பங்களுக்கான 20 சைக்கில்கள் மற்றும் 20 உலர் உணவுப் பொதிகள் பகிர்ந்தளிக்கும் நிகழ்வானது ஞாயிற்றுக்கிழமை (05) டிசம்பர் 2021 அன்று பெரியகட்டு புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்றது. தந்திரிமலை ரஜமஹா விகாரையின் தலைமை பிக்குவான வண தந்திரிமலை சந்திரதன தேரரின் ஒருங்கிணைப்பில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
சிவில் சமூகம் மற்றும் இராணுவத்தினருக்கு இடையிலான ஒத்துழைப்பையும் நல்லிணக்கத்தையும் மேலும் மேம்படுத்தும் நோக்கில், சைக்கில்கள் பாடசாலை மாணவர்களின் போக்குவரத்துச் சுமையைக் குறைக்கும் என்பதால் தேவையுடைய, மாணவர்களுக்கு தந்திரிமலை ரஜமஹா விகாரையின் தலைமை பிக்குவான வண. தந்திரிமலை சந்திரதன தேரரின் ஒருங்கிணைப்பில் 'பாத்' அமைப்பினால் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
5 (தொ) இலங்கை இலேசாயுத காலாட்படையின் கட்டளை அதிகாரி மேஜர் எஸ்.டி.ரத்னசிறி, 213 வது பிரிகேட் தளபதி கேணல் எல்.ஜி.ஜே. என்.ஆரியதிலக அவர்களின் மேற்பார்வையின் கீழ் 2வது இயந்திரவியல் காலாட் படையினருடன் இணைந்து,பிக்குவின் ஆலோசனைக்கமைய பிரதேச செயலக அதிகாரிகளின் பங்கேற்புடன் முன்னெடுக்கப்பட்டது.
வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சம்பக்க ரணசிங்க மற்றும் 21 வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மொஹான் ரத்நாயக்க ஆகியோரின் அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டுதலின்படி இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. நன்கொடையாளர்களின் பிரதிநிதிகள் மற்றும் 'பாத்' அமைப்பின் உறுப்பினர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.