Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th December 2021 13:41:05 Hours

புதிய இராணுவ பதவி நிலை பிரதானி கடமைகளை ஆரம்பிக்கிறார்

இராணுவத்தின் 59 வது பதவி நிலை பிரதானியாக நியமனம் பெற்றுகொண்டுள்ள மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே இன்று (9) காலை ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள இராணுவத் தலைமையகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் மத வழிபாடுகளுக்கு மத்தியில் கடமைகளை பொறுப்பேற்றுகொண்டார்.

புதிய நியமனத்திற்கான அலுவலகத்திற்கு வருகை தந்த பதவி நிலை பிரதானி செத் பிரித் பாராயணங்களுக்கு மத்தியில் மகா சங்கத்தினரின் ஆசிர்வாதங்களையும் பெற்றுக்கொண்டார். அதனையடுத்தி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் உத்தியோகபூர்வ ஆவணங்களில் கையொப்பமிட்டு கடமைகளை பொறுப்பேற்றுகொண்டார். இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் தளபதியாகவும் நியமனம் வகிக்கின்ற அவர் இராணுவ தளபதியவர்களின் வேண்டுகோளுக்கிணங்க புதிய பதவி நிலை பிரதானியாக பதவியேற்கும் முன்பாக இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதியாக நியமனம் வகித்தார்.

இந்நிகழ்வின் போது அவருக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதற்காக, தலைமை பதவி நிலை அதிகாரிகள் , பணிப்பாளர்கள், உள்ளடங்களான சிரேஷ்ட அதிகாரிகள் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

கஜபா படையணியின் நிலையத் தளபதி பிரிகேடியர் தினேஷ் உடுகம, இலங்கை இராணுவ தேசிய பாதுகாப்பு படையணியின் நிலையத் தளபதி பிரிகேடியர் ஷென் குணவர்தன ஆகியோர் உட்பட சில சிரேஷ்ட அதிகாரிகள் ஒன்றுகூடி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களுக்கு நுழைவாயிலில் வைத்து வரவேற்பளித்தனர்.

மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே தொடர்பிலான சுருக்கமான விவரம் வருமாறு;

மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே ஒரு பயிலிளவல் அதிகாரியாக 1986 இல் இலங்கை இராணுவ நிரந்தர படையின் பாடநெறி 26 இல் இணைந்தார். மேலும் தியத்தலாவவில் உள்ள இலங்கை இராணுவ கல்லூரி மற்றும் பாகிஸ்தான் இராணுவ கல்வியற் கல்லூரி ஆகியவற்றில் அடிப்படை இராணுவப் பயிற்சிகளைப் பெற்றுள்ளார். பயிலிளவல் அதிகாரிகளுக்கான பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தவுடன், அவர் இரண்டாவது லெப்டினன்ட் பதவியில் நியமிக்கப்பட்டதோடு பின்னர் கஜபா படையணியில் இணைத்துகொள்ளப்பட்டார்.

அவரது 35 வருட இராணுவ வாழ்க்கையில், பிளட்டூன் தளபதி, கம்பெனி தளபதி மற்றும் 4வது கஜபா படையணியின் நிறைவேற்று அதிகாரி , 21 மற்றும் 55 வது காலாட்படைப் பிரிவுகளின் புலனாய்வு அதிகாரி, 14வது கஜபா படையணியின் இரண்டாவது கட்டளை அதிகாரி உள்ளிட்ட பல நியமனங்களை வகித்துள்ள அவர், ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் நிறைவேற்று அதிகாரி, கஜபா படையணியின் தலைமையகத்தின் பதவி நிலை அதிகாரி II (நிர்வாகம்), 10வது கஜபா படையணியின் இரண்டாம் நிலை கட்டளை அதிகாரி ,படையினர் விவகார பணிப்பகத்தின் இரண்டாம் நிலை அதிகாரி, 8வது கஜபா படையணியின் கட்டளை அதிகாரி, 225 மற்றும் 553 பிரிகேட்களின் தளபதி(மேற்பார்வை) , கொழும்பு கட்டளை நடவடிக்கைகளுக்கான பிரிவு தளபதி, 215, 542, 224, 221 மற்றும் 623 பிரிகேடுகளின் தளபதி,(கோட்பாடு & பயிற்சி) பணிப்பாளர் மற்றும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானி அலுவலக பணிப்பாளர்( நடவடிக்கை& முறைமை), அம்பாறை போர்ப் பயிற்சிப் பாடசாலை தளபதி, உளவியல் நடவடிக்கை பணிப்பாளர் நாயகம், 21 படைப்பிரிவு தளபதி, மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி, மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார். தற்பொழுது அவர் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் தளபதி மற்றும் இலங்கை இராணுவ வூசு குழுவின் தளபதியாகவும் நியமனம் வகித்துவருகின்றார்.

மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே தான் வகித்த நியமனங்களுக்கான அலுவலக பணிகளின் போது அவரது அனுபவங்களையும் விரிவுப்படுத்திகொண்டதோடு, மாதுரு ஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையில் உள்ளகப் பாதுகாப்பு , எதிர்நடவடிக்கை போர்ப் பயி்ற்சி பாடநெறி என்பவற்றையும் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் அறிவுறுத்தல் முறைப் பாடநெறியையும், மின்னேரியா பீரங்கிப் பயிற்சி கல்லூரியில் முன்னோக்கு பராமரிப்பு பகுதிகளின் பட்டாலியன்களை கண்காணிக்கும் பணிகளுக்கான பாடநெறிகள் என்பவற்றையும் வெற்றிகரமாக பூர்த்தி செய்துகொண்டுள்ளார். அத்தோடு, மின்னேரியா காலாட்படை பயிற்சி பாடசாலையில் ஆயுதப் பயிற்சி வகுப்பு, மாதுரு ஓயா இராணுவப் பயிற்சிப் கல்லூரியில் படைப்பிரிவுத் தளபதிகளின் புத்தாக்கப் பாடநெறி இராணுவத் தலைமையகத்தில் கம்பனித் தளபதிகளின் புத்தாக்கப் பயிற்சிப் பாடநெறி, இராணுவப் புலனாய்வுப் படையில் பிரிவு பாதுகாப்பு அதிகாரிகளின் பாடநெறி, சேர் ஜான் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பொதுத் தலைமைத்துவப் படை மற்றும் முகாமைத்துவ பாடநெறி, 21 பிரிவில் உள்ள அடிப்படை மத்தியஸ்த திறன் மற்றும் செயல்முறை பயிற்சிகள், குகுலேகங்காவில் உள்ள பன்னாட்டு படைப்பிரிவு பயிற்சி- 3 ஆகியவற்றையும் பூர்த்தி செய்துள்ளார்.

அதேபோல், இந்தியாவில் அதிகாரிகளின் உடற் பயிற்சி, பாகிஸ்தானில் இளம் அதிகாரிககுள்ளான கற்கைநெறி, இந்தியாவில் சிரேஷ்ட அதிகாரிகளுக்கான பாடநெறி, பங்களாதேஷில் கட்டளை அலகுகளின் தளபதிகளுக்கான கற்கைநெறி, சிரேஷ்ட தளபதிகளுக்கான கற்கைநெறி உட்பட பல வெளிநாட்டுப் கற்கைகள், பட்டறைகள் மற்றும் தொழில்முறை தரமிக்க கருத்தரங்குகள் ஆகியவற்றிலும் அவர் பங்குபற்றியுள்ளார். இந்தியா மற்றும் ஹவாயில் மேம்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்புத் திட்டம், இந்தோனேசியாவின் இன்ஸ்டிடியூட் ஒப் லெம்ஹன்னாஸின் கற்கைநெறி ஆகியவற்றையும் இவர் பயின்றுள்ளார்.

மேலும், அவர் இந்தோனேசியாவின் லெம்ஹன்னாஸ் பல்கலைக்கழகத்தில் மூலோபாய மற்றும் பின்னடைவு ஆய்வுகளில் முதுகலைப் பட்டமும், ஹவாயில் உள்ள பாதுகாப்பு ஆய்வுகளுக்கான ஆசிய-பசிபிக் மையத்தில் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் 'உலகளாவிய பாதுகாப்பு' என்ற பட்டமும் பெற்றுள்ளார். மேலும், அவர் இந்தியாவின் இந்தூர் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு முகாமைத்துவம் தொடர்பிலான டிப்ளமாவும் பெற்றுள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் பெருமளவான பங்களிப்புக்களை வழங்கியுள்ள மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே, எதிரிகளுக்கு எதிராக தனிப்பட்ட மற்றும் கூட்டிணைந்த துணிச்சலான நடவடிக்கைகளுக்கான ரண விக்கிரம பதக்கம் பெற்றுள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மனிதாபிமான நடவடிக்கைகளின் போது பயங்கரவாதத்தை ஒழிப்பதில் முன்னோடியாக இருந்ததற்காக மேற்படி சிரேஷ்ட அதிகாரி தனது இராணுவ வாழ்க்கையில் மூன்று முறை மேற்கண்ட விருதுகளைப் பெற்றார். அதேபோல், எதிர் நடவடிக்கைளின் போது காயமடைந்ததற்காக தேச புத்திர பதக்கத்தை வெற்றுள்ள அவர், மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே கிழக்கு மனிதாபிமான நடவடிக்கை பதக்கம், வடக்கு மனிதாபிமான நடவடிக்கை பதக்கம், பூர்ண பூமி பதக்கம், வடக்கு மற்றும் கிழக்கு நடவடிக்கை பதக்கம், ரிவிரேச பிரச்சார சேவை பதக்கம், 50 வது சுதந்திர ஆண்டு நினைவு பதக்கம், இலங்கை இராணுவத்தின் 50 வது ஆண்டு நினைவு பதக்கம் போன்ற சேவைக்கான பதக்கங்கள் மற்றும் சேவா அபிமானி பதக்கம் மற்றும் சேவை பதக்கம் ஆகியவற்றையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

அத்துடன் அவர் புத்த சாசனத்தின் வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகளுக்காக அமரபுர பௌத்த பீடத்தின் பிக்குகள் சபையால் ‘ஜனமன்ய விபூத்திரத்னா’ என்ற கௌரவ பட்டம் வழங்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். இவர் அவர் திருமதி ஜானகி ஜெயரத்னவை திருமணம் முடித்துள்ளதோடு இரு பிள்ளைகளின் தந்தையுமாவார். மேஜர் ஜெனரல் எச்.எல்.வி.எம் லியனகே இலங்கை இராணுவத்தின் பதவி நிலை பிரதானியாக நியமனம் பெற்றுகொள்ளும் முன்பாக இராணுவ தொண்டர் படையின் 47 வது தளபதியாக 2021 ஒக்டோபர் 05 நியமனம் பெற்றிருத்தமை குறிப்பிடத்தக்கது.