09th December 2021 10:29:07 Hours
மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 61 வது படைப்பிரிவின் 611 வது பிரிகேடின் 8 வது இலங்கை சிங்கப் படையணியின் சிப்பாய்களால், 'சிரச' தொலைக்காட்சி வழங்கிய அனுசரணையுடன் கேகாலை அரந்தரவில் பிரதேசத்தில் வசிக்கும் ஊனமுற்ற குடும்பம் ஒன்றிற்காக நிர்மாணிக்கப்பட்ட மேலும் ஒரு புதிய வீடு செவ்வாய்க்கிழமை (30) பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.
MTV/MBC, 'சிரச' ஊடக வலையமைப்பு தனது 'சிரச நிவாச' திட்டத்தின் மூலம் இந்த வீட்டை நிர்மாணிப்பதற்காக பாதுகாப்பு பதவி நிலை பிரதானியுமான இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களிடம் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக இத்திட்டத்திற்காக இராணுவத்தின் ஆளணி மற்றும் தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்பட்டது.
வறுமையில் வாடும் திரு ரொஷான் விக்ரமசிங்க மற்றும் அவரது குடும்பத்தின் அவல நிலையைப் தொடர்பில் அனுசரணையாளர்களின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து குறைந்த ஆளணி மற்றும் குறைந்த செலவீனத்துடன் அவருக்கான வீட்டை நிர்மாணிக்கும் நோக்கில் அனுசரணையாளர்கள் இராணுவத் தளபதியிடம் கோரிக்கையை முன்வைத்திருந்தனர்.
அதன்படி மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா மற்றும் கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனத்தின் குழும பணிப்பாளர் திருமதி நீத்ரா வீரசிங்க ஆகியோர் செவ்வாய்க்கிழமை (30) சம்பிரதாயமான வீடு திறக்கும் விழாவில் கலந்துகொண்டனர்.
மத அனுட்டானங்களுடன் சம்பிரதாயபூர்வமாக நிகழ்வுகளுக்கமைய பிரதம அதிதி மற்றும் அனுசரணையாளர்களால் சுப வேளையில் வீட்டின் பெயர் பலகை திரைநீக்கம் செய்யப்பட்டு பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டது. அதே சமயத்தில் மங்கள விளக்கேற்றல் மற்றும் பால் பொங்குதல் போன்ற சடங்கு நிகழ்வுகளை தொடர்ந்து ஊனமுற்ற சிறு பிள்ளைக்காக ஒரு ஜோடி ஊன்றுகோலும் பயனாளியிடம் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் 611 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஜானக உடோவிட்ட, மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் திட்டமிடல் அதிகாரி பிரிகேடியர் துஷார கணேபொல, 8 வது இலங்கை சிங்கப்படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் டீசீஎஸ்கே அத்துகோரல, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், 'சிரச' அதிகாரிகள், பயனாளி குடும்பத்தினரின் உறவினர்கள் மற்றும் நலன் விரும்பிகளும் கலந்து கொண்டனர்.