Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th December 2021 12:00:44 Hours

இராணுவ தளபதியால் வழங்கப்பட்ட மேலும் சில சுவாச அளவீட்டு கருவிகள் தெற்கு மருத்துவமனைகளுக்கு விநியோகம்.

இராணுவத் தளபதிக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட சுவாச அளவீட்டு கருவிகள் (oximeters) ,மத்திய பாதுகாப்புப் படைகளின் கட்டளையின் கீழ் உள்ள 12 வது படைப் பிரிவின் படையினர் அண்மையில் அம்பலாந்தோட்டை வைத்தியசாலை, பெலியத்த ஆயுர்வேத வைத்தியசாலை, கிரிந்த பிரதேச வைத்தியசாலை, லுனுகம்வெஹெர பிரதேச வைத்தியசாலை திஸ்ஸமஹாராம தள வைத்தியசாலை, பிரதேச வைத்தியசாலை கதிர்காமம், பெலியத்த பிரதேச வைத்தியசாலை, பிரதேச வைத்தியசாலை வலஸ்முல்ல, ஹம்பாந்தோட்டை சுகாதர வைத்திய அலுவலகம் மற்றும் லுனுகம்வெஹர சுகாதார வைத்திய அலுவலகம் ஆகியவற்றுக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நன்கொடையாளர்களால் வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை மிகவும் தேவைப்படும் நோயாளிகளின் நலனுக்காக விநியோகிக்க ஏற்பாடுகளை செய்யுமாறு பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அனைத்து பாதுகாப்பு படைத் தலைமையகங்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.

மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சமந்த சில்வா, 14 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன ரணவக்கவிடம் இந்த மருத்துவ உபகரணங்களை விநியோகிக்கும் நிகழ்ச்சியை முன்னெடுக்குமாறு பணிபுரை விடுத்தார்.