Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th December 2021 13:31:30 Hours

கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவினருக்கு திறன் மேம்பாடு தொடர்பான செயலமர்வு

இலங்கையின் தேசிய வைத்தியசாலையின் ஆலோசகர் ஊட்டச்சத்து வைத்தியர் ருஷ்டி அஹமட் அவர்கள் கொழும்பு இராணுவ வைத்தியசாலை அதிகாரிகளின் அழைப்பின் பேரில் புதன்கிழமை (1) 'ஊட்டச்சத்து சிகிச்சை மற்றும் தீவிர நோய்' என்ற தலைப்பில் விரிவுரையை நிகழ்த்தினார்.

இந்த விரிவுரையில் சிறந்த நோயாளி பராமரிப்பு, நிர்வாகம் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவினர்களால் மேம்படுத்தப்பட்ட நடைமுறைகள் தொடர்பாக, கொழும்பு இராணுவ மருத்துவமனையில் உள்ள மயக்க மருந்து துறை மற்றும் தீவிர சிகிச்சை பிரிவினர்களால் அவர்களின் திறனை மென்மேலும் மேம்படுத்தும் நிமித்தம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விரிவுரையில் இராணுவ வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரவின் அதிகாரிகள் மற்றும் தாதிமார் பலர் கலந்து கொண்டனர்.