Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd December 2021 14:31:50 Hours

வடக்கு சுற்றுப்பயணத்தின் போது இராஜதந்திரிகள் யாழ்- பாதுகாப்பு படைத்தலைமையகத்திற்கு விஜயம்

இலங்கையில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் இராஜதந்திரிகள் குழுவொன்று வடக்கிற்கான சுற்றுப்பயணத்தின் போது யாழ்.பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு அவர்களை மரியாதை நிமித்தமாக வியாழக்கிழமை (2) யாழ்.பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் சந்தித்தது.

தூதுக்குழுவில் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹோலி, பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் இயன் கெய்ன், சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு ஆலோசகர் பிரட் செஹந்தர், மூன்றாம் செயலாளர் (அரசியல்) , ஆய்வு மற்றும் தகவல் அதிகாரி திருமதி லாரா மற்றும் ஆராய்ச்சி மற்றும் தகவல் அதிகாரி திரு அன்னக்கரகே ஆகியோர் அடங்குவர். யாழ்.பாதுகாப்பு படைத் தலைமைக தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு தூதுக்குழுவினரை அன்புடன் வரவேற்றர்.

யாழ் குடாநாட்டிற்குள் சிவில்-இராணுவ ஒருங்கிணைப்பு நல்லிணக்கம் மற்றும் மீள் ஒருங்கிணைப்பு செயல்முறை மற்றும் பரஸ்பர நலன்கள் குறித்து தளபதி மற்றும் அவுஸ்திரேலிய தூதுக்குழுவினர் சுமுகமான கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். இந்த சந்திப்பின் போது மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு அவர்கள் யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புப் படையினரின் தற்போதைய வகிபங்கு மற்றும் பணிகள் , நல்லிணக்கம் மற்றும் இன நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் சிவில்-இராணுவ ஒத்துழைப்புத் திட்டங்களில் குறிப்பாக கவனம் செலுத்துவது பற்றிய விரிவான விளக்கத்தை பிரதிநிதிகளுக்கு வழங்கினார்.

கலந்துரையாடலின் முடிவில் விஜயம் செய்த தூதுக்குழு மற்றும் பாதுகாப்புப் படைத் தளபதி நல்லெண்ணத்தை அடையாளப்படுத்தும் வகையில் நினைவுச் சின்னங்களை பரிமாறிக்கொண்டனர். இறுதியாக, உயர் ஸ்தானிகர் அவர்கள் புறப்படுவதற்கு முன் பார்வையாளர்கள் புத்தகத்தில் தனது எண்ணங்களை பதிவிட்டார்.