Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd December 2021 14:26:49 Hours

இராணுவ ஒருங்கிணைப்பில் ஒட்டுசுட்டான் வைத்தியசாலைக்கு அத்தியாவசிய உபகரணங்கள்

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகம் (SFHQ-MLT) நல்லிணக்கத்தை மேலும் மேம்படுத்தும் வகையில் இலங்கை ஹோட்டல் பட்டதாரிகளின் சங்க உறுப்பினர்களின் அனுசரணையுடன், ஒட்டுசுட்டான் அரச வைத்தியசாலைக்கு கைத்தறி மற்றும் சுகாதார அத்தியாவசியப் உபகரணங்களை நன்கொடையாக புதன்கிழமை (1) வழங்கியது.

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க சார்பில் 64 ஆவது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் உபுல் வீரகோன் வைத்தியசாலைக்கு சென்று மெத்தைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், துடைப்பான், ஆடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அன்பளிப்பாக வழங்கினார்.

நிகழ்ச்சியின் போது நன்கொடையாளர் குழுவின் பிரதிநிதிகள், வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி டாக்டர் எஸ்.பிரபு சங்கர், 64 வது படைப்பிரிவின் சிவில் அலுவல்கள் அதிகாரி மற்றும் வைத்தியசாலை பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.