Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th November 2021 08:00:45 Hours

படையினரின் உரிய நேரத்த செயற்பாட்டால் அணைக்கட்டு உடைப்பு தவிர்ப்பு

அண்மையில் பெய்த கடும் மழையினால் வெள்ள நீர் பெருக்கெடுத்துள்ளதை அடுத்து நீர்க் கசிவு ஏற்பட்டு பெரும் உடைப்பு ஏற்படும் அபாயத்தை கொண்டிருந்த வெஹரதென்ன குளக் கட்டின் கசிவை தடுப்பதற்கு படையினரை உடனடியாக ஈடுப்படுத்துமாறு 62 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் உபாலி குணசேகரவின் பணிப்புரையின் பேரில் 623 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ரொஹான் மெதகொட, 11 வது கெமுனு படையணியின் கட்டளை அதிகாரியான லெப்டினன்ட் கேர்ணல் பி.கருணாரத்னவிற்கு அறுவுறுத்தல்களை வழங்கினார்.

அதன்படி, அந்தந்த நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள் முன்னிலையில் 11 வது கெமுணு ஹேவா படையினர் அப்பகுதியில் உள்ள கிராம மக்களின் ஆதரவுடன் பாதிக்கப்படக்கூடிய இடங்களில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்த அவசர நலைக் குறித்து வன்னிப் பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சம்பக்க ரணசிங்கவுக்கு அவசர தேவை குறித்து அறிவிக்கப்பட்டது.

மஹாவலி எல் வலயத்தின் விவசாயக் கிராம மக்கள் ஆர்வத்துடன் படையினருடன் இணைந்து மணல் மூட்டைகள் மற்றும் மண் குவியல்களைப் பயன்படுத்தி அவசர திருத்தப் பணிகளை மேற்கொண்டனர்.