Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th November 2021 13:00:04 Hours

10 வது இலங்கை இலேசாயுத காலாட் படையினரால் சிறுவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் விநியோகம்

65 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் அனில் சமரசிரி அவர்களின் தலைமையில் 65 வது படைப்பிரிவின் கீழ் அமைந்திருக்கும் 652 ஆவது பிரிகேடில் உள்ள 10 ஆவது இலங்கை இலேசாயுத காலாட்படையணியின் படையினரால் கொவிட் -19 நோய் தொற்றுக்கு பின்னர் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் தங்களின் சொந்தப் பணத்தில் வழங்கப்பட்டது.

அதற்கமைய கொல்லவிளாங்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிக்கும் குறைந்த வருமானத்தில் வசிக்கும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் பரிசாக வழங்கப்பட்டன. இந்த நிகழ்வை 10 வது இலேசாயுத காலாட்படையணியின் கட்டளை அதிகாரி, 652வது பிரிகேட் தளபதி இந்த திட்டத்தை மேற்பார்வையிட்டனர் என்பது குறிப்பிடதக்கவிடயமாகும்.