Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th November 2021 19:37:22 Hours

வைத்தியசாலை கட்டுமான பணிகள் புதிய நிறைவேற்று நாயகம் கண்காணிப்பு

இராணுவத்தின் நிறைவேற்று நாயகமாக புதிதாக நியமனம் பெற்ற மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்ல, கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் செயற்பாடுகள் மற்றும் நிர்மாணப் பணிகள் தொடர்பான தகவல்களைப் அறிந்துகொள்ளும் நோக்கில் மேற்பார்வை விஜயமொன்றினை வெள்ளிக்கிழமை (5) மேற்க்கொண்டிருந்தார்.

இந்த விஜயத்தின் போது, நிறைவேற்று நாயகம் வைத்தியசாலையின் செயற்பாட்டு அம்சங்களை மீளாய்வு செய்ததுடன், இராணுவ சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பிரிகேடியர் கிரிஷாந்த பெர்னாண்டோ மற்றும் சிரேஷ்ட நிருவாகிகளுடன் அது தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடினார்.

பின்னர், 15 மாடிகள் கொண்ட புதிய கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளை கண்காணித்த அவர், அதன் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்தார். இராணுவத் தளபதியின் ஆலோசனையின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட புதிய நிர்மாணமானது நெரிசலை மட்டுப்படுத்தல் மற்றும் கட்டுமான செயற்பாடுகள் நிறைவடைந்து இயங்க ஆரம்பித்த பின்னர் மேலும் சில மருத்துவ பிரிவுகளை நிறுவுவதற்கு இலகுவான வகையில் இத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இராணுவ சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பிரிகேடியர் கிரிஷாந்த பெர்னாண்டோ, பொறியியலாளர் சேவைகள் பணிப்பாளர் பிரிகேடியர் கே.எம்.எஸ்.குமார, மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் தளபதி பிரிகேடியர் ஆரியசேன, இராணுவ வைத்திய சேவைகள் பணிப்பாளர் பிரிகேடியர் நிஷாந்த பத்திரன, முகாமைத்துவ மற்றும் பராமரிப்பு பணிப்பாளர் பிரிகேடியர் எஎஜேஎஎஸ் பெரேரா, கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் பணிப்பாளர் பிரிகேடியர் ஏ.எம்.சி. அத்தநாயக்க, இராணுவ நிறைவேற்று நாயக அலுவலகத்தின் பதவி நிலை அதிகாரி I (நிர்வாகம்), கேணல் யூ.வி.டபிள்யூ.எஸ். அமரசிறி ஆகியோர் இந்த விஜயத்தின் போதான நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தனர். அனைத்து பங்கேற்பாளர்களும் கொவிட் – 19 ஒழுங்குவிதிகளை முறையாக கடைப்பிடித்தனர்.