Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th November 2021 12:31:53 Hours

572 வது பிரிகேட் படையினர் அவசர நிலைமைகளுக்கான தயார் நிலை ஒத்திகை

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 572 வது பிரிகேட் தலைமையகத்தின் கீழ் சேவையாற்றும் 6 வது இலங்கை சிங்கப் படையணி மற்றும் 14 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படையினர் இணைந்து கிளிநொச்சி பகுதிகளில் பரந்த சேவையை வழங்கும் நோக்கத்தை அடிப்படையாக கொண்டு காலநிலை அனர்த்தங்களுக்கு முகம் கொடுக்கும் வகையில் ஒத்திகை பயிற்சிகளை ஆரம்பித்தனர்.

57 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன, 572 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் நிஷாந்த முத்துமால ஆகியோர் இணைந்து ஒக்டோபர் 28-29 திகதிகளுக்கான இருநாள் பயிற்சிகளை ஆரம்பித்து வைத்தனர்.

பயிற்சிகளின் போது, வெள்ள அபாயங்கள் அல்லது மற்றைய இயற்கை அனர்த்தங்கள், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள், சமூக உதவிச் செயற்பாடுகள் , உடனடி நிவாரணம் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைள் தொடர்பிலான ஒத்திகை பயிற்சிகளில் படையினர் ஈடுபட்டனர்.