Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th November 2021 16:31:44 Hours

பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் மேம்பாட்டிற்கான நிலையத்தின் புதிய கண்டுபிடிப்புகளை பாதுகாப்பு செயலாளரிடமிருந்து தளபதி பொறுப்பேற்கிறார்

தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் கீழுள்ள பாதுகாப்பு ஆராச்சிகள் மற்றும் மேம்பாட்டு நிலையத்தின் இராணுவ மற்றும் சிவில் கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவதற்கான செயற்பாடுகளில் முன்னேற்றம் கண்டுள்ளது. அதன்படி பாதுகாப்பு அமைச்சு மற்றும் முப்படையினர், வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அவசியமான 15 திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டு பனாகொடவிலுள்ள பாதுகாப்பு ஆராச்சிகள் மற்றும் மேம்பாட்டு நிலையத்தின் தலைமையகத்தில் (8) நடைபெற்ற நிகழ்வின் போது வழங்கி வைக்கப்பட்டது.

பாதுகாப்பு ஆராச்சிகள் மற்றும் மேம்பாட்டு நிலையத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கே.ஆர்.பி ரொவெல், பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, கடற்படை மற்றும் விமானப் படைகளின் தளபதிகள் ஆகியோரும் மேற்படி முப்படை செயற்பாடுகள் சார்ந்த இயந்திரங்களை காட்சிப்படுத்தும் நிகழ்வுகளில் கலந்துகொண்டனர். பேரில் ட்ரோன் ஜேமர் மேம்பாட்டுத் திட்டம், நிலம் கையகப்படுத்துதல் மற்றும் விற்பனைத் தகவல் முகாமைத்துவ தொகுதி, உணவு கொள்முதல் முகாமைத்துவ தொகுதி, ஆவண முகாமைத்துவ தொகுதி, புரிந்துணர்வு ஒப்பந்த மேலாண்மை அமைப்பு, டிஜிட்டல் மொபைல் ரேடியோ உற்பத்தி, சிறப்பு செயல்பாடுகளுக்கான கண்காணிப்பு தொகுதி, காட்டு பாதைகளில் துப்பாக்கி சூடுக்கான ஸ்மார்ட் டார்கெட் தொகுதி, BTR குறிபார்த்து சுடுவதற்கான இயந்திரங்கள், குறிபார்த்து சுடுவதற்கான மோட்டார், B-வாகன குறிபார்த்து சுடுவதற்கான மற்றும் ஹைடெக் சோல்ஜர் தொகுதி ஆகியவற்றை உள்ளடக்கிய இராணுவம் தொடர்பான புதுமையானதும் ஆக்கபூர்வமானதுமான தயாரிப்புக்களை பெற்றுக்கொள்வதற்காக அழைப்பை ஏற்று பங்குபற்றினர்.

மேற்படி உபகரணங்களில் அங்கவீனமுற்ற வீரர்களின் பயன்பாட்டிற்கு அவசியமான பிரத்தியேகமான செயற்கை கைகள், வனஜீவராசிகள் திணைக்களத்தினால் பயன்படுத்தக்கூடிய காட்டு யானைகளுக்கு உதவும் சாதனங்கள் மற்றும் பயிலிளவல் அதிகாரிகளுக்கான தகவல் கட்டமைப்பு தொகுதிகள், உள்ளிட்ட வியக்கத்தக்க கண்டுபிடிப்புக்கள் இதன்போது காட்சிபடுத்தப்பட்டன.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) கலந்துகொண்டிருந்ததோடு, மேற்படி கண்டிப்பிடிப்புக்களில் பாதுகாப்பு அமைச்சின் பயன்பாட்டிற்கான 5 உபகரணங்களை பாதுகாப்பு ஆராச்சிகள் மற்றும் மேம்பாட்டு நிலையத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கே.ஆர்.பி ரொவெல் (ஓய்வு) அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார். ட்ரோன் ஜாமர் மேம்பாட்டுத் தொகுதி, நிலம் கையகப்படுத்துதல் மற்றும் வழங்குதல் தகவல் முகாமைத்துவ தொகுதி, உணவு கொள்முதல் முகாமைத்துவ தொகுதி, ஆவண முகாமைத்துவ தொகுதி, புரிந்துணர்வு ஒப்பந்த முகாமைத்துவ அமைப்பு ஆகியவையும் அடங்கும். அதேநேரம் அவற்றுக்கான காப்புரிமைச் சான்றிதழ்களும் பிரதம விருந்தினரிடத்தில் கையளிக்கப்பட்டன. அதனையடுத்து முப்படைகள், வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்திற்கான தயாரிக்கப்பட்ட உபகரணங்களை பகிர்ந்தளிக்க ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன்படி, பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் தளபதியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களிடம், டிஜிட்டல் மொபைல் ரேடியோ, சிறப்பு நடவடிக்கைகளுக்கான கண்காணிப்பு சாதனம், காட்டு வழி துப்பாக்கிச் சூடுக்கான ஸ்மார்ட் இலக்கு தொகுதி, BTR குறிபார்த்து சுடும் உபகரணம், குறிபார்த்து சுடும் மோட்டார் உபகரணம், B-ரக குறிபார்த்து சுடும் வாகனம் மற்றும் உயர்-தொழில்நுட்ப தொகுதிகள் என்பனவும் பிரதம விருந்தினரால் வழங்கி வைக்கப்பட்டன.

அதேபோன்று, கடற்படை மற்றும் விமானப்படையின் தளபதிகள், பாதுகாப்புச் செயலாளரிடமிருந்து தலா 10 டிஜிட்டல் மொபைல் ரேடியோக்களை பெற்றுகொள்ள அழைக்கப்பட்டனர். இதே வேளையில், ‘ரணவிரு செவன’வில் புனர்வாழ்வளிக்கப்பட்டு வரும் போர்வீரரான சாதாரண சிப்பாய் டி.டபிள்யூ.எம்.கே பெர்னாண்டோவுக்கு இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக பிரத்தியேகமான முதலாவது இலத்திரனியல் செயற்கை கரம் பாவனைக்கான வழங்கி வைக்கப்பட்டது.

மேலும், வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு எம்.எஸ்.எல்.ஆர்.பி மாரசிங்க மற்றும் தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் பி.டபிள்யூ.பி. ஜயசுந்தர ஆகியோர் காட்டு யானைகளை விரட்டுவதற்கான கையடக்க சாதனத்தையும் தேசிய மாணவர் சிப்பாய் படையணிக்கான சிறப்பு அதிகாரிகளின் தரவுத்தளத்தையும் முறையே பெற்றுக்கொண்டனர். பாதுகாப்பு ஆராச்சிகள் மற்றும் மேம்பாட்டு நிலையத்தின் நிகழ்வின் நிறைவில் நிலையத்தின் செயற்பாடுகளை பங்கேற்பாளர்கள் மேற்பார்வை செய்தனர்.