07th November 2021 06:01:02 Hours
99 வது தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளின் 2வது கட்டம் சுகததாச விளையாட்டரங்கில் இராணுவ வீரர்கள் உட்பட பல வீரர்களின் பங்குபற்றுதலுடன் ஒக்டோபர் 30 மற்றும் 31 ம் திகதிகளில் இடம்பெற்றது.
இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையின் கோப்ரல் ரொஷான் தம்மிக்க ரணதுங்க 110 மீற்றர் தடை தாண்டல் ஓட்டத்தை 13.89 வினாடிகளில் கடந்து புதிய இலங்கை சாதனையை பதிவு செய்தார். இதனால் 1997 ஆம் ஆண்டு மலேசிய தடகள போட்டியில் மகேஷ் பெரேராவால் 14.00 வினாடிகளில் பதிவு செய்யப்பட்ட சாதனை முறியடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேபோல் கோலூன்றி பாய்தல் போட்டியில் இலங்கை சமிக்ஞைப் படையைச் சேர்ந்த சாதாரண சிப்பாய் கே.எல்.எஸ்.கே பெரேரா 3.57 மீற்றர்களைப் பதிவு செய்து மற்றுமொரு புதிய தேசிய சாதனையை நிகழ்த்தினார். இதனால் கோலூன்றி பாய்தல் வீராங்கனை சாதாரண சிப்பாய் பெரேரா 2020 ஆம் ஆண்டில் பதிவு செய்த 3.5 மீ என்ற சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இராணுவ நீளம் பாய்தல் வீராங்கனையான இலங்கை இராணுவ மகளிர் படையின் சாதாரண சிப்பாய் சரங்கி சில்வா 2020 ஆம் ஆண்டில் தன்னால் பதிவு செய்யப்பட்ட 6.44 மீ சாதனையை புதுபிக்கும் வகையில் 6.48 மீற்றர்கள் பாய்ந்து புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளார்.
பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் வழிகாட்டலின் கீழ் இலங்கை இராணுவ தடகள குழுவின் தலைவரும் இராணுவ முதலாம் படையணியின் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அவர்களின் ஊக்குவிப்பினால் மேற்படி வீரர்கள் போட்டிகளில் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் சுற்று மே மாதம் நடைபெற்றிருந்து.