Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st November 2021 14:15:16 Hours

இராணுவ தளபதிக்கு அன்பளிப்புச் செய்யப்பட்ட வைத்திய உபகரணங்கள் பகிர்ந்தளிப்பு

அமெரிக்காவிலுள்ள இலங்கை சங்கம் ஒன்றினால் இலங்கை பாதுகாப்பு பதவிநிலை பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட்-19 பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட வைத்திய உபகரணங்கள் பகிர்தளிக்கும் திட்டத்திற்கமைய மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சமந்த சில்வா அவர்களின் மேற்பார்வையின் கீழ் கண்டி மற்றும் பேராதனை வைத்தியசாலைகளுக்கு வைத்திய உபகரணங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

கொவிட்-19 தொற்று நோயாளர்களின் நலனுக்காக ஒவ்வொரு வைத்தியசாலைகளுக்கும் 5 மல்டிபரா கண்காணிப்பு திறன் கொண்ட வைத்திய உபகரணங்கள் விநியோகிக்கப்பட்டதோடு. 11 வது படை பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் கித்சிறி லியனகே அவர்களினால் குறித்த உபகரணங்கள் உத்தியோகபூர்வமாக சுகாதார அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டன.