Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st November 2021 14:40:16 Hours

அங்கவீனமான பெண்ணுக்கு வாழ்வாதார உதவி

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 65 வது படைப் பிரிவின் 653 வது பிரேகேடின் 24 வது கஜபா படையணியின் அனுசரணையுடன் மடு, சின்னபாண்டிவிரிச்சான் பகுதிகயைச் சேர்ந்த திருமதி லியோன் மெத்தலைன் என்ற அநாதரவான அங்கவீனமான பெண்ணுக்கு அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்கள் மற்றும் சக்கர நாற்காலி என்பன வியாழக்கிழமை (28) வழங்கி வைக்கப்பட்டன.

653 வது பிரிகேடி தளபதி கேணல் டி.என்.சி.சேரசிங்க அவர்களின் மேற்பார்வையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிரேஸ்ட அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டனர்.