Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th October 2021 08:00:00 Hours

11 வது படைப்பிரிவு மகளிர் சிப்பாய்களுக்கு மார்பக புற்றுநோய் தொடர்பில் கற்பிப்பு

11 வது படைப்பிரிவு தலைமையகம் பல்வேறு அமைப்புகளில் பணிபுரியும் மகளிர் சிப்பாய்களுக்கு மார்பக புற்றுநோய் தொடர்பாக கற்பிக்கும் நோக்கில் 27 ஒக்டோபர் அன்று 11 வது படைப்பிரிவு தலைமையகத்தில் இராணுவ மகளிர் சிப்பாய்களுக்கான மார்பக புற்றுநோயின் தன்மையை கண்டறிவதற்கான சிகிச்சை முறைமைகள் தொடர்பிலான விரிவுரை ஒன்றை ஏற்பாடி செய்யப்பட்டிருந்தது.

11வது படைப்பிரிவு தளபதியின் அழைப்பின் பேரில் கண்டி போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் ஒருவரால் விரிவுரை நிகழ்த்தப்பட்டது.

மருத்துவ சிகிச்சைகைகளுக்ககான உதவிகளை லைன் க்ளோதிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் வழங்கியது.

மத்திய பாதுகாப்புப் படை தலைமையக தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் 11 வது படைப்பிரிவு தளபதியின் மேற்பார்வையில் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.