Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th October 2021 15:53:40 Hours

பீரங்கிப் படை கல்லூரியில் பிரதி பதவி நிலை பிரதானிக்கு வரவேற்பு

இலங்கை இராணுவத்தின் பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சம்பத் கொடுவேகொட, இலங்கை பீரங்கி படையின் படைத் தளபதியாக கடமைகளை ஏற்றுக்கொண்டதன் பின்னர் மின்னேரியாவில் உள்ள பீரங்கி படை பயிற்சி பாடசாலைக்கான முதலாவது விஜயத்தை சனிக்கிழமை (23) மேற்கொண்டிருந்த போதும் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையுடன் வரவேற்பளிக்கப்பட்டது.

பிரதம அதிதி விஜயத்தின் போது பீரங்கி படை பயிற்சி பாடசாலையின் படையிளரால் வழங்கப்பட்ட கௌரவங்களை ஏற்றுக்கொண்டதன் பின், இராணுவ மரபுகளுக்கு அமைவாக படையணி தலைமையகத்தில் வழங்கப்பட்ட கௌரவங்களை ஏற்றுக்கொண்டார்.

அதேபோன்று, இலங்கை பீரங்கி படையணியானது, 'முன்னோக்கி மூலோபாய திட்டம் 2020 - 2025'க்கு இணங்க, ' துப்பாக்கிதாரி பயிற்றுவிப்பாளர்கள்' கருத்தரங்கு 2021 திட்டமிடப்பட்ட முன்னோக்கி மூலோபாய திட்டம் வடிவமைப்பதற்கான வலுவான எதிர்கால அணுகுமுறையின் தேவை' என்ற தொனிப்பொருளில் இலங்கை பீரங்கி படை சமகால மாற்றங்களுடன் போட்டியிடுவதற்காகவும், எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப இராணுவத்தின் முன்னோக்கி பயணத்திற்கு இயைவாகும் வகையில் ஆரம்பமானது.

பின்னர் பிரதம விருந்தினரால் செயலமர்வு ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாக இராணுவத்தின் 36 வது பிரதி பதவி நிலை பிரதானி தனது விஜயத்தின் அடையாளமாக பயிற்சி பாடசாலை வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் நாட்டி வைத்தார்.

அதனையடுத்து நிகழ்விற்கு வருகை தந்திருந்து பிரதி பதவி நிலை பிரதானிக்கு பயிற்சி பாடசாலையின் சேவையில் உள்ள மற்றும ஓய்வுபெற்ற சிரேஸ்ட அதிகாரிகளால் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

நிகழ்வின் ஆரம்பகட்டமாக நிர்வாக குழுவின் அதிகாரிகளால் ஆராய்ச்சிகள் மற்றும் கண்டுபிடிப்புக்கள் தொடர்பிலான கருத்தாடல்களும் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது, மேஜர் ஜெனரல் மஞ்சுள கருணாரத்ன (ஓய்வு) அவர்களால் அதிகாரிகளுக்கான உணவறையில் இடம்பெற்ற நிகழ்வின் சிறப்புரை நிகழ்த்தப்பட்டது. அங்கு கருத்துரைக்கையில் பீரங்கிப் பிரிகேட் தளபதி மற்றும் பீரங்கி பயிற்சி பாடசாலை தளபதிக்கும் பிரங்கிப் படை கல்லூரியில் அறிவு மேம்பாட்டிற்கான கருத்தாடல்களுடன் கூடியதான செயலமர்வுகளை ஏற்பாடு செய்திருந்தமைக்கு நன்றிகளை கூறிக்கொண்டார்.

பின்னர் பிரதம விருந்தினர் நிகழ்வில் பங்கேற்ற அதிகாரிகளுடனான குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்விலும் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் மேஜர் ஜெனரல் சஞ்சய வணசிங்க, மேஜர் ஜெனரல் அஜித் திஸாநாயக்க, மேஜர் ஜெனரல் வந்தித மஹின்கந்த, மேஜர் ஜெனரல் ஷிரான் அபேசேகர, மேஜர் ஜெனரல் அஜித் கொலம்பதந்திரி, மேஜர் ஜெனரல் உபாலி குணசேகர, மேஜர் ஜெனரல் சமன் லியனகே, மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டதோடு, இவ்வாறான நிகழ்வில் பங்கேற்க சந்தர்ப்பம் கிடைத்தமைக்காக நன்றிகளையும் கூறிக்கொண்டனர்.