26th October 2021 23:00:33 Hours
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு இராணுவத் தளபதியினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின்படி அரசாங்கத்தின் சேதனைப் பசளைகள் உற்பத்தி திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், இலங்கை உரம் உற்பத்தி நிலையம் இந்த பெரும் போக காலத்திற்கு தேவையான உரத்தினை பெற்றுக் கொடுப்பதற்காக கிழக்கு பாதுகாப்பு படையினரால் உற்பத்தி செய்யப்பட்ட 86, 961 கிலோ சேதனைப் பசளைகளை செவ்வாய்க் கிழமை 26 ம் திகதி நடைபெற்ற எளிய விழாவின் போது 'லக் பொஹோர' நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டது.
திட்டத்தின் பின்னணியில் முன்னனியில் இருந்த கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அவர்களினால் இலங்கை உரக் கம்பனியின் பொது முகாமையாளர் திரு ஆர்ஏபி பெரேராவை அவர்களை வெலிகந்த கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகம் வளாகத்திற்கு வரவழைத்து விவசாயிகளின் நலன் கருதி விநியோகிப்பதற்கான உரப் தொகுதிகளை அடையாளப்பூர்வமாக வழங்கினார்.
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியின் அறிவுறுத்தலின் பேரில் கிழக்கு பாதுகாப்பு படையின் கட்டளை அமைப்புகளின் படையினர் கடந்த சில மாதங்களில் விவசாயத் திறன் கொண்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் பங்கேற்புடன் இந்த உற்பத்தி செயல்முறைக்கு தங்கள் நிபுணத்துவத்தை அர்ப்பணித்தனர்.
இலங்கை உர நிறுவனத்தின் பொது முகாமையாளர் திரு. ஆர். ஏ.பி பெரேரா, இராணுவத்தின் முயற்சிக்கு நன்றி தெரிவித்ததுடன், பெறுநர்களால் தீர்மானிக்கப்பட்டபடி உர தொகுதிகளை எடுத்துச் செல்வதற்கு முன்னர் அவ்இடத்தில் அடையாளமாக ஒரு தொகை உரத்தினை பெற்றுக்கொண்டார். 23 வது படைப்பிரிவின் தளபதி, பிரிகேடியர் பொது பணி, பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் வழங்கல், சிலோன் உரக் கம்பனி லிமிடட்டின் கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தின் பிராந்திய முகாமையாளர்கள் ஆகியோரும் சுகாதார வழிகாட்டுதல்களின் படி இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.