27th October 2021 10:30:00 Hours
ரஸ்ய பாதுகாப்பு படைகளின் தளபதியுடன் திங்கட்கிழமை (25) இடம்பெற்ற 2 மணி நேர கலந்துரையாடலின் நிறைவில் பாதுகாப்புத் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு ரஸ்ய பாதுகாப்பு படைகளின் தளபதி ஜெனரல் ஒலெக் சல்யுகோவ், மொஸ்கோவில் அமைந்துள்ள உயர் ஆயுதக் கட்டளை கல்லூரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
கல்லூரிக்கு வருகை தந்த இலங்கை இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களை கல்லூரின் நுழைவாயிலில் மொஸ்கொ உயர் ஆயுதக் கட்டளைப் கல்லூரியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ரோமன் பின்யுகோவ் வரவேற்றார். கல்லூரியின் பயிற்சி பாடத்திட்டத்தின் ஒரு அங்கமான உருவாக்கப்பட்ட பொறியியல் படைகளின் புதிய ஆராய்ச்சிகளுக்கு அமைவான தயாரிப்புக்கள் மற்றும் கண்டுபிடிப்புகள் தொடர்பிலும் இலங்கை இராணுவத் தளபதிக்கு விளக்கமளிக்கப்பட்டது. குறிப்பாக தெரிவுகள், கட்டளை பிரிவுகள், செயன்முறை கல்வி உள்ளிட்ட கல்லூரியில் கிடைக்கும் சேவைகள் தொடர்பிலும் தெளிவூட்டப்பட்டது.
மேற்படி சந்திப்பின் நிறைவில், கல்லூரித் தளபதி மேஜர் ஜெனரல் ரோமன் பின்யுகோவ் அவர்களினால் கல்லூரிககு வருகை தந்த விருந்தினரான ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு அவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது. கல்லூரியின் சிரேஸ்ட அதிகாரிகள் பலரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
மொஸ்கோ உயர் ஆயுதக் கட்டளை கல்லூரி என்பது ரஸ்ய ஆயுதப் படைகளின் உயர் இராணுவக் கல்வி நிறுவனமாகும். இது டிசம்பர் 1917 இல் 1 வது மாஸ்கோ புரட்சிகர இயந்திர துப்பாக்கி அதிகாரிகளுக்கான கல்லூரியாக உருவாக்கப்பட்டு, பின்னர் மாஸ்கோ உயர் ஆயுதக் கட்டளை கல்லூரியாக மாற்றியமைக்கப்பட்டது. இக் கல்லூரி கட்டளை பயிற்சிக்காக வடிவமைக்கப்பட்டுள்ளதோடு, அதிகாரிகள் மற்றும் இராணுவ பொறியாளர்கள் உயர் தொழில்முறை கல்வி மற்றும் அடிப்படை மற்றும் பயன்பாட்டு அறிவியல் ஆராய்ச்சியை நடத்துவதற்கான களமாக அமைந்துள்ளது. அத்தோடு, நாட்டின் பாதுகாப்பு திறனை வலுப்படுத்துதல் மற்றும் இராணுவ வீரர்களின் தொழில்முறை கல்வியை மேம்படுத்துவதற்குரிய களமாகவும் இக்கல்லூரி விளங்குகிறது.