Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd October 2021 21:29:54 Hours

முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தினால் மேலும் மூன்று புதிய வீடுகள் கிளிநொச்சி பொதுமக்களுக்கு அன்பளிப்பு

முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தின் 57 வது படைப்பிரிவு படையினரால் கடந்த சில நாட்களில் தனது கட்டுப்பாட்டு பகுதி பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பல சமூக திட்டங்கள் முன்னெடுக்கபட்டது.

அதன்படி, அனுசரணையளர்களிடமிருந்து பெறப்பட்ட நிதி பங்களிப்புடன் திரு எம் விஜேந்திரனின் குடும்பத்திற்கு 7 வது இலங்கை இலேசாயுத காலாட்படை (SLLI) மற்றும் 9 வது இலங்கை சிங்க படையினர் (SLSR) புதிய வீட்டை நிர்மாணித்தனர். ஆரம்ப தினத்தில் அப்பகுதியில் உள்ள வறிய குடும்பங்களுக்கு 20 உலர் உணவுப் பொதிகளை படையினர் வழங்கினர்.

அதே வேளை 572 வது பிரிகேட்டின் கீழ் உள்ள 6 வது இலங்கை சிங்க படையணி (SLSR), இலங்கை தேசிய பாதுகாப்பு காவலர் படையணி (SLNG) படையினர், விசுவமடு புத்தடியில் உள்ள திரு சம்முகநாதன் திலீபனுக்கு நன்கொடையாளர்களின் ஒத்துழைப்புடன் மேலும் ஒரு வீட்டை நிர்மாணித்தனர். அதேபோன்று, 573 வது பிரிகேட்டின் 9 வது விஜயபாகு காலாட்படை படையினர் நன்கெடையளர்களின் அனுசரணையுடன் திரு ஜெகநாதன் பத்மசீலனுக்கு மலையாளபுரத்தில் ஒரு வீட்டை நிர்மாணித்தனர்.

அதே வேளையில் மேலும் 20 உலர் உணவுப் பொதிகள் பிரதேசத்தில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சிசிர பிலப்பிட்டிய அவர்கள் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக நடைபெற்ற கையளிக்கும் நிகழ்வில் கலந்துக் கணெ்டு பயனாளிகளுக்கு வீட்டு சாவிகளை கையளித்தார்.

நிகழ்வில் 57 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன, முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பொது பணி பிரிகேடியர் வசந்த பாலமகுபுர, 571 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சமிந்த கம்லத், 572 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் நிஷாந்த முத்துமால, ஆகியோரும் கலந்து கொண்டனர்.